சாம்சங் தனது அடுத்த கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம் 21-ஐ மார்ச் 16-ஆம் தேதி அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. கேலக்ஸி எம் 21-ன் சிறப்பம்சம் அதன் மூன்று பின்புற கேமரா அமைப்பாக இருக்கும், இது 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருடன் வர வாய்ப்புள்ளது என்று தொழில்துறை வட்டாரங்கள் ஐ.ஏ.என்.எஸ் இடம் தெரிவித்தது .
Samsung Galaxy M21-ல் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே, கூடுதலாக 6,000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சாதனம் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படுகிறது, மேலும் இது இரண்டு வேரியண்டுகளில் வரலாம் - 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்.
கேலக்ஸி எம், ஆன்லைன் பிரத்தியேக ஸ்மார்ட்போன் வரிசையானது கடந்த ஆண்டு அறிமுகமான இளம் நுகர்வோரை மையமாகக் கொண்டது, இந்தியாவில் வளர்ந்து வரும் ஆன்லைன் சேனலில் Samsung சந்தை பங்கை வென்றெடுக்க உதவியது. கேலக்ஸி எம் 21 Amazon-னிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் சில்லறை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.
தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனம் Galaxy M31-ஐ பிப்ரவரி 25-ஆம் தேதி ரூ.15,999 என்றஆரம்ப விலையில் அறிமுகம் செய்த பின்னர் இது இந்தியாவில் சாம்சங்கின் எம் சீரிஸில் சமீபத்தியதாக இருக்கும். சாம்சங், உண்மையில், கடந்த இரண்டு காலாண்டுகளில் ஆன்லைன் இடத்தில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது.
அதன் கேலக்ஸி எம் சீரிஸ், குறிப்பாக Galaxy M30s சாதனம், ஆன்லைன் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டது, இது 2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அதன் ஆன்லைன் பங்கை எல்லா நேரத்திலும் அதிகபட்சமாக 16.6 சதவீதமாகப் புதுப்பிக்க உதவியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்