இந்தியாவில் Samsung Galaxy M21, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-ல் இருந்து தொடங்குகிறது
சாம்சங் கேலக்ஸி எம் 21, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் இரண்டு தனித்துவமான வேரியண்டுகளில் வருகிறது
சாம்சங் கேலக்ஸி எம் 21 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் அறிமுகமான கேலக்ஸி எம் 20-க்கு அடுத்தபடியாக புதிய சாம்சங் போன் உள்ளது. தொடராக இருப்பதால், ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட பல மேம்படுத்தல்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy M21, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-ல் இருந்து தொடங்குகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது, இது இன்னும் அதிகாரப்பூர்வ விலைக் குறியீட்டைப் பெறவில்லை. இரண்டு மாடல்களும் மிட்நைட் ப்ளூ மற்றும் ரேவன் பிளாக் கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேலும், அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ளபடி மார்ச் 23-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வாங்குவதற்கு கிடைக்கும். பிற விற்பனை சேனல்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டூயல்-சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி எம் 21, யுஐ 2.0 உடன் Android 10-ல் இயக்குகிறது மற்றும் 6.4 இன்ச் முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC உள்ளது, மாலி-ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யு மற்றும் 6 ஜிபி வரை LPDDR4x ரேம் இணைக்கப்பட்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் புகைப்படங்களைக் கைப்பற்றுவதற்கும் வீடியோக்களைப் பதிவு செய்வதற்கும் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இது 8 மெகாபிக்சல் சென்சாருடன் ஜோடியாக 123 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது.
செல்ஃபிக்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம் 21 முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களுடன் செயல்படுகிறது மற்றும் முன்பே ஏற்றப்பட்ட ஃபேஸ் அன்லாக் ஆப்ஷனை ஆதரிக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம் 21-ல் 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வருகிறது. போனின் உள்ள பிற சென்சார்களில் accelerometer, ambient light, gyro, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.
கேலக்ஸி எம் 21-ல் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000 எம்ஏஎச் பேட்டரியை சாம்சங் வழங்கியுள்ளது. தவிர, இந்த போன் 8.9 மிமீ தடிமன் மற்றும் 188 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch