ஜிஎஸ்டி விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக முந்தைய அதிகரிப்புக்குப் பிறகு கேலக்ஸி எம் 21 விலையை சாம்சங் குறைத்தது.
சாம்சங் கேலக்ஸி எம் 21 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது
Samsung கேலக்ஸி எம் 21-ன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போனின் தற்போதைய ஆரம்ப விலை ரூ.13,199-ஆகும். சமீபத்தில், மொபைல் போன்களில் ஜிஎஸ்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் காரணமாக, சாம்சங் தனது ஸ்மார்ட்போனின் விலையை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த போன் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சாம்சங் Galaxy M21-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.13,499-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி உயர்வுக்கு பின் ரூ.14,222-யாக அதிகரித்தது.
தற்போது விலை ரூ.13,199-யாக குறைக்கப்பட்டுள்ளது.
போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,499-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி உயர்வுக்கு பின் ரூ.16,499-யாக அதிகரித்தது.
இந்த வேரியண்டின் தற்போதைய விலை அறிமுக விலையில் மாற்றமின்றி ரூ.15,499-யாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 21 ஆண்ட்ராய்டு 10 உடன் ஒன் யுஐ 2.0-ல் இயங்குகிறது. இது 6.4 அங்குல முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி யு சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் மாலி-ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யு ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 செயலி உள்ளது. இதில் 6 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது.
போனின் மூன்று பின்புற கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன். போனில் 20 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போன்128 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இந்த போனில் 15 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை உதவியுடன் 6,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus 16 Launched With 9,000mAh Battery, Snapdragon 8 Elite Extreme Gen 6 Chipset: Price, Specifications
Amazon Great Indian Festival Sale 2026: Best Deals on Echo Devices and Alexa Speakers