இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 21 விலை ரூ.13,499-யில் இருந்து தொடங்குகிறது மற்றும் இது மிட்நைட் ப்ளூ மற்றும் ரேவன் பிளாக் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்21, ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்21 இன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் விற்பனை அமேசான், சாம்சங்.காம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகள் வழியாக இன்று தொடங்க உள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy M21 விற்பனை Amazon India-ல் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இது Samsung.com மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகள் வழியாகவும் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம்21-ன், 4 ஜிபி + 64 ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.13,499-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.15,499-யாகவும் உள்ளது. இந்த போன் மிட்நைட் ப்ளூ மற்றும் ரேவன் பிளாக் ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். அமேசான், ஸ்மார்ட்போன்களில் அறிமுக தள்ளுபடியாக ரூ.500 வழங்குகிறது, இது மார்ச் 31 வரை பொருந்தும்.
டூயல்-சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி எம்21, ஒன் யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.4 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படுகிறது, இது மாலி-ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யு மற்றும் 6 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்21-ல் 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம்.
கேலக்ஸி எம்21-ல், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவு செய்வதற்கும் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இது 8 மெகாபிக்சல் சென்சாருடன் 123 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களைப் பொறுத்தவரை, போனின் முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. செல்ஃபி கேமரா செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களுடன் செயல்படுகிறது மற்றும் முன்பே ஏற்றப்பட்ட ஃபேஸ் அன்லாக் ஆப்ஷனை ஆதரிக்கிறது.
கேலக்ஸி எம்21-ல் சாம்சங் 6,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது, இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த போன் பின்புறத்தில் கைரேகை சென்சாருடனும் வருகிறது.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
New Images of Interstellar Object 3I/ATLAS Show a Giant Jet Shooting Toward the Sun
NASA’s Europa Clipper May Cross a Comet’s Tail, Offering Rare Glimpse of Interstellar Material