சாம்சங் கேலக்ஸி எஸ்10 வகை போன்களில் தற்போது 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதி அப்டேட் ஆக உள்ளது. இதுகுறித்து சாம்சங் கிரேட்டர் சீனா தலைவர் குவான் குயிஷியான் கூறும்போது, கேலக்ஸி எஸ்10, எஸ்10+, எஸ்10இ உள்ளிட்ட மாடல்களில் ஓடிஏ சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் 25W சார்ஜிங் வசதி வர உள்ளது என்றார்.
இந்த வசதிகள் ஏற்கனவே கேலக்ஸி எஸ்10 5ஜி மாடல்களிலும், சமீபத்தில் வெளியான கேலக்ஸி ஏ70 மாடல்களிலும் உள்ளது. இதேபோல், லெனோவா நிர்வகிக்கும் மோடோரோலா போன்களிலும் 25W பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐடிஹோம் வெளியிட்டுள்ள தகவலின் படி, சீனாவில் உள்ள சாம்சங் ஸ்டோரில் தங்களது ரசிகர்களுக்கு மத்தியில் குயிஷியான் பேசும்போது, சாம்சங் கேலக்ஸி எஸ்10 வகை மாடல்களில் 25W பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதற்காக ஓடிஏ அப்டேட் அடுத்த மாதத்திற்குள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
சாம்சங் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10+, கேலக்ஸி எஸ்10இ உள்ளிட்ட மாடல்களில் ஏற்கனவே பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி உள்ளது. ஆனால், அதில் கொடுக்கப்பட்ட பவர் அடாப்டர் மூலம் 15W சார்ஜிங் திறனே அந்த போன்கள் கொண்டுள்ளது. இதில் இருந்து மாறுப்பட்டு, ஏப்.5ல் வெளியாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி மாடலில் மட்டும் 25W பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியுடன் வெளியாக உள்ளது. இதேபோல், இந்த வாரத்தில் வெளியான கேலக்ஸி ஏ70 போனிலும் இந்த 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
கேலக்ஸி எஸ்10 வகை மாடல்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஓடிஏ சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் 25W பாஸ்ட் சார்ஜிங் பெற முடிந்தாலும், வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்ற புது சார்ஜிங் அடாப்டரை தனியாக வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்