Samsung Galaxy S10 Lite 512 ஜிபி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வேரியண்ட் 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் கடந்த மாதம் இந்தியாவில் ஒரு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் புதிய 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனாக அதே விவரக்குறிப்புகள் (8 ஜிபி ரேம் உட்பட) மற்றும் வடிவமைப்புடன் வருகிறது.
புதிய Samsung Galaxy S10 Lite 8 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.44,999 ஆகும். Samsung Galaxy S10 Lite 512 ஜிபி ஆப்ஷன் மார்ச் 1 முதல் அதாவது திங்களன்று சில்லறை விற்பனை கடைகள், சாம்சங் ஓபரா ஹவுஸ், சாம்சங் இ-ஷாப் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்கள் வழியாக விற்பனைக்கு வரும். இந்த போன் Prism White, Prism Black மற்ற் Prism Blue ஆப்ஷன்களில் வருகிறது.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy S10 Lite ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான One UI 2.0-ல் இயங்குகிறது, மேலும் 6.7 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் பிளஸ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ஆக்டா கோர் SoC-ஐக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இண்டனல் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை மேலும் (1TB வரை) விரிவாக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.
Samsung Galaxy S10 Lite Review
Samsung Galaxy S10 Lite மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/2.0 aperture உடன் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, f/2.2 aperture உடன் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் f/2.4 aperture உடன் மூன்றாவது 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, சாம்சங் f/2.2 aperture உடன் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை இந்த போனில் பொருத்தியுள்ளது.
போனில் 25W சார்ஜருடன் ஒரு பெரிய 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Samsung Galaxy S10 Lite, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது, மேலும் வழக்கமான இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. இந்த போன் 75.6x162.5x8.1 மிமீ அளவு மற்றும் 186 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்