ஒன்பிளஸ் 8, ஐபோன் 11, ஒப்போ எப்5, சாம்சங் கேலக்ஸி M31 உள்ளிட்ட பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் பிரைம் டே சேலில் விற்பனைக்கு வருகின்றன.
Photo Credit: Amazon.in
அமேசான் பிரைம் டே சேலில் 40 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசானில் பிரைம் டே சேல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுபற்றிய விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரைம் டே சேல் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் தற்போது அமேசான் பிரைம் டே ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் சேல், வரும் ஆகஸ்ட் 6-7 ஆகிய தேதிகளில் நடைபெறகிறது. பிரைம் டே ஆஃபர் என்பது அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான். மேற்கொண்டு, புதிய வாடிக்கையாளர்களும் பிரைம் சந்தாவைச் செலுத்தி இந்த ஆஃபர்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பிரைம் டே ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டிவி, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சிறப்புத் தள்ளுபடியில் விற்கப்படும். குறிப்பாக அண்மையில் வெளியான புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் லெவல் போன்களான ஒன்பிளஸ் 7T, ஐபோன் 11, ஒன்பிளஸ் 8, சாம்சங் கேலக்ஸி M31 கிடைக்கின்றன. இதே போல் பட்ஜெட் லெவல் ஸ்மார்ட்போன்களான ரெட்மி 8A டூயல், சாம்சங் கேலக்ஸி M21, ஒப்போ A5 2020 விற்பனை செய்யப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி M11 குறைந்த விலை ஸ்மார்ட்போன் அமேசான் பிரைம் சேலில் பட்டியலிப்பட்டுள்ளது. எனவே, ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு இது நல்ல ஒரு வாய்ப்பாகும்.
மேற்கண்ட ஆஃபர்களைத் தவிர்த்து, வாட்ச், அன்றாட தேவைகள், விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன.
அமேசான் பே கணக்கு மூலம் பொருட்கள் வாங்கினால், 2,000 ரூபாய்க்கான கூடுதல் சலுகைகளும் உண்டு. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. இது அமேசானின் நான்காவது பிரைம் டே ஆஃபர் ஆகும்.
அமேசான் பிரைம் ஆண்டு சந்தா ரூ.999, மாத சந்தா ரூ.129 ஆகும். அமேசானில் சாதாரண வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள், புதியவர்கள் இந்த சந்தாத் தொகையைச் செலுத்தி பிரைம் வாடிக்கையாளர்களாக மாறலாம். இதன் மூலம் அமேசான் பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக், பிரைம் ரீடிங் ஆகியவற்றையும் பெற முடியும்.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation