கேலக்ஸி எம் 30-க்கு அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி எம் 31 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாம்சங் போன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy M31-ன் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆன்ஷனுக்கு ரூ.15,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.16,999 விலைக் குறியீட்டுடன் வருகிறது. இருப்பினும், ஒரு அறிமுக சலுகையின் கீழ், நிறுவனம் ரூ.1,000 தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம் 31-ன் இரண்டு வேரியண்டுகளும் Ocean Blue மற்றும் Space Black கலர் ஆப்ஷன்களில் வருகின்றன. மேலும், இந்த ஸ்மார்ட்போன் அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் குறிப்பிட்ட சில்லரை கடைகள் மூலம் மார்ச் 5-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.
டூயல்-சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி எம் 31, One UI 2.0 உடன் Android 10-ல் இயக்குகிறது மற்றும் 6.4 அங்குல முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது - இது சூப்பர் அமோலேட் பேனலின் ஆதரவுடன் உள்ளது மற்றும் 19.5: 9 விகிதத்தைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் octa-core Exynos 9611 SoC-யைக் கொண்டுள்ளது. இந்த SoC 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, சாம்சங் கேலக்ஸி எம் 31 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 லென்ஸுடன் 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ISOCELL பிரைட் GW1 சென்சார் அடங்கும். கேமரா அமைப்பில், f/2.4 aperture உடன் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் f/2.2 aperture உடன் 5 மெகாபிக்சல் depth கேமரா ஆகியவற்றுடன், f/2.2 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 123 டிகிரி பார்வைக் களத்துடன் (FoV) உடன் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சாரைக் கொண்டுவருகிறது.
செல்ஃபி மற்றும் வீடியோக்களுக்கு, சாம்சங் கேலக்ஸி எம் 31-ல் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது, இது 4K மற்றும் ஸ்லோ-மோ வீடியோ பதிவுகளை ஆதரிக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம் 31-ல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உள்ளன, இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கக்ம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.
Samsung 6,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது, இது 26 மணிநேர வீடியோ பிளேபேக் அல்லது 119 மணிநேர மியூசிக் பிளேபேக்கை ஒரே சார்ஜில் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது. தவிர, இந்த போன் 8.9 மிமீ அளவு மற்றும் 191 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்