இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 31 வெளியானது! 

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 31 வெளியானது! 

கேலக்ஸி எம் 30-க்கு அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி எம் 31 வருகிறது

ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி எம் 31 இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது
  • இந்த போன் சமீபத்திய One UI அனுபவத்துடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது
  • சாம்சங் கேலக்ஸி எம் 31 தேதியிட்ட எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படுகிறது
விளம்பரம்

கேலக்ஸி எம் 30-க்கு அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி எம் 31 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாம்சங் போன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.


இந்தியாவில் Samsung Galaxy M31-ன் விலை: 

இந்தியாவில் Samsung Galaxy M31-ன் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆன்ஷனுக்கு ரூ.15,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.16,999 விலைக் குறியீட்டுடன் வருகிறது. இருப்பினும், ஒரு அறிமுக சலுகையின் கீழ், நிறுவனம் ரூ.1,000 தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 31-ன் இரண்டு வேரியண்டுகளும் Ocean Blue மற்றும் Space Black கலர் ஆப்ஷன்களில் வருகின்றன. மேலும், இந்த ஸ்மார்ட்போன் அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் குறிப்பிட்ட சில்லரை கடைகள் மூலம் மார்ச் 5-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.


Samsung Galaxy M31-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி எம் 31, One UI 2.0 உடன் Android 10-ல் இயக்குகிறது மற்றும் 6.4 அங்குல முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது - இது சூப்பர் அமோலேட் பேனலின் ஆதரவுடன் உள்ளது மற்றும் 19.5: 9 விகிதத்தைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் octa-core Exynos 9611 SoC-யைக் கொண்டுள்ளது. இந்த SoC 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, சாம்சங் கேலக்ஸி எம் 31 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 லென்ஸுடன் 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ISOCELL பிரைட் GW1 சென்சார் அடங்கும். கேமரா அமைப்பில், f/2.4 aperture உடன் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் f/2.2 aperture உடன் 5 மெகாபிக்சல் depth கேமரா ஆகியவற்றுடன், f/2.2 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 123 டிகிரி பார்வைக் களத்துடன் (FoV) உடன்  8 மெகாபிக்சல் செகண்டரி சென்சாரைக் கொண்டுவருகிறது. 

samsung galaxy m31 back image gadgets 360 Samsung Galaxy M31

சாம்சங் கேலக்ஸி எம் 31 நான்கு தனித்துவமான கேமரா சென்சார்களுடன் பளபளப்பான பின்புறத்தைக் கொண்டுள்ளது

செல்ஃபி மற்றும் வீடியோக்களுக்கு, சாம்சங் கேலக்ஸி எம் 31-ல் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது, இது 4K மற்றும் ஸ்லோ-மோ வீடியோ பதிவுகளை ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 31-ல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உள்ளன, இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கக்ம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

Samsung 6,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது, இது 26 மணிநேர வீடியோ பிளேபேக் அல்லது 119 மணிநேர மியூசிக் பிளேபேக்கை ஒரே சார்ஜில் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது. தவிர, இந்த போன் 8.9 மிமீ அளவு மற்றும் 191 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Excellent battery life
  • Decent performance
  • Good photo quality in daylight
  • Bad
  • Disappointing low-light camera performance
  • Spammy notifications
  • Poor video stabilisation
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »