Samsung Galaxy M31 பிப்ரவரி 25-ஆம் தேதி இந்தியாவில் சமீபத்திய Galaxy M-சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது Galaxy M30 மற்றும் Galaxy M30s-ன் தொடர்ச்சியாக இருக்கும், அவை பட்ஜெட் ஸ்மார்ட்போன்களாகும். Galaxy M31, பிப்ரவரி 25 முதல் சாம்சங் தனது இணையதளத்தில் விளம்பரப்படுத்தியபடி விற்பனைக்கு வரும். அதன் கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி ஆயுள் காரணமாக நிறுவனம் இதை ‘மெகா மான்ஸ்டர்' என்று அழைக்கிறது, இது விரைவில் கிடைக்கும். எனவே, Galaxy M3 பற்றிய அனைத்து உண்மைகளையும் வதந்திகளையும் பற்றி பார்ப்போம்.
Samsung, Galaxy M31-ஐ பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய நேரப்படி, மதியம் 1 மணிக்கு (1pm IST on February 25) அறிமுகம் செய்யும். இது Amazon மற்றும் சாம்சங் ஸ்டோரிலும் கிடைக்கும். Galaxy M31-க்காக சாம்சங் ஒரு வெளியீட்டு நிகழ்வைக் கொண்டிருக்குமா இல்லையா என்பது தெரியவில்லை.
இந்தியாவில் Samsung Galaxy M31-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜுடன் கூடிய அடிப்படை மாடலின் விலை ரூ.15,999-யில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜுடன் அறிவிக்கப்பட்ட இரண்டாவது வேரியண்டின் விலை அறியப்படவில்லை. இந்த விலை மற்ற ‘Galaxy M' சீரிஸ் போன்களுக்கு ஏற்ப உள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் Galaxy M30-ன் அடிப்படை மாடலின் விலை ரூ.9,649 ஆகும், அதே சமயம், அடிப்படை மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Galaxy M30s ரூ.12,999-க்கு கிடைக்கிறது.
வெளியீட்டு தேதிக்கு அருகில் செல்லும்போது, Galaxy M31 பற்றிய கூடுதல் தகவல்கள் உறுதிப்படுத்தப்படும், ஆனால் இப்போது நமக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், முதன்மை கேமராவுடன் 64 மெகாபிக்சல் தெளிவுதிறனுடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது முழு-எச்டி + சூப்பர்-அமோலேட் இன்ஃபினிட்டி-யு டிஸ்பிளே மற்றும் 6,000mAh பேட்டரி கொண்டிருக்கும். பேட்டரி திறன் Galaxy M30-ஐ விட அதிகமாக உள்ளது, இது 5,000mAh திறன் கொண்டது, ஆனால் Galaxy M30s-ப் போன்றது.
முந்தைய வதந்திகள் Galaxy M31, Exynos 9611 SoC-யால் இயக்கப்படும் என்றும் Android 10 அடிப்படியிலான சாம்சங்கின் One UI 2.0 உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. 4 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் உள்ளிட்ட பல மாடல்கள் இருக்கும் என்று யூகங்கள் தெரிவிக்கின்றன. Galaxy M31-க்கான திரை அளவு 6.4-அங்குலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது 15W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவோடு வரக்கூடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்