Samsung Galaxy M30s மற்றும் Samsung Galaxy M10s ஸ்மார்ட் போன்களின் முழு அம்சங்கள் குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி M30s போனைப் பொறுத்தவரை, 6000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் பெற்றுள்ளது. பெயரிலியே இருப்பதுபோல, இந்த சாம்சங் கேலக்ஸி M30s, M30-யின் அப்டேட்டட் வெர்ஷன் ஆகும். சாம்சங் M10s போனும் 10,000 ரூபாய்க்கு உள்ளேயே விலை நிர்ணயிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M30s சிறப்பம்சங்கள்:
6.4 இன்ச் இன்ஃபினிட்டி-யூ டிஸ்ப்ளே, ஆமோலெட் பேனல், 6,000 எம்.ஏ.எச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 9.0 பைய் மென்பொருள் உள்ளிட்ட அட்டகாச அம்சங்களை சாம்சங் கேலக்ஸி M30s பெற்றுள்ளது.
கேமரா பிரிவைப் பொறுத்தவரை, 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை பின்புற கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கில் லென்ஸ் கேமரா, 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமராக்களைப் பெற்றுள்ளது M30s. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்டா-கோர் சாம்சங் எக்சினோஸ் 9611 எஸ்.ஓ.சி-யைப் பெற்றுள்ள M30s, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இரண்டு வகைகளில் வரும்.
ஓப்பல் கறுப்பு, சஃபையர் நீலம், பியர்ல் வெள்ளை நிறங்களில் சாம்சங் கேலக்ஸி M30s கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி M30s விலை:
சாம்சங் கேலக்ஸி M30s-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை 13,999 ரூபாயாகும். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனிப் விலை 16,999 ரூபாயாகும். அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஆன்லைன் தளம் மூலம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்குக் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி M10s சிறப்பம்சங்கள்:
பட்ஜெட் போனான சாம்சங் கேலக்ஸி M10s, சூப்பர் ஆமோலெட் டிஸ்ப்ளே, 6.4 இன்ச் எச்.டி+ டிஸ்ப்ளே, எக்சினோஸ் 7884பி எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4000 எம்.ஏ.எச் பேட்டரி, 15w அதிவேக சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களைப் பெற்றுள்ளன. அதைத் தவிர்த்து, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 13 மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா. செல்ஃபிகளுக்காக முன்புறம் 8 மெகா பிக்சல் கேமரா இருக்கும். ஸ்டோன் நீலம் மற்றும் பியானோ கறுப்பு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி M10s விலை:
சாம்சங் கேலக்ஸி M10s-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை 8,999 ரூபாயாகும். அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்கள் மூலம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்