வெளியானது சாம்சங் கேலக்ஸி 'A70' விலை விவரம்; ரிலீஸ் குறித்தும் தகவல்..!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 12 ஏப்ரல் 2019 17:20 IST
ஹைலைட்ஸ்
  • சீனாவில் A70 ப்ரீ-ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது
  • A70-க்கு என்று தனியாக ஒரு மைக்ரோசைட்டை ஆரம்பித்துள்ளது சாம்சங்
  • இந்த போன் குறித்து சென்ற மாதம் முதன்முதலாக தகவல் தெரிவிக்கப்பட்டது

4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த போனில் 25W சூப்பர் சார்ஜிங் உள்ளது. 

சாம்சங் கேலக்ஸி A70 ஸ்மார்ட்போனின் விலை என்னவென்று சீனாவில் தகவல் கசிந்துள்ளது. சீனாவில், சாம்சங் A70 மாடல் ப்ரீ-ஆர்டரை ஆரம்பித்துள்ளது. அதற்கான விலையாக சுமார் 31,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இந்தியா தளத்திலும், A70 குறித்த சிறப்பம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் அர்த்தம், இந்தியாவில் A70 சீக்கிரமே ரிலீஸ் ஆகலாம் என்பதுதான். இந்த வாரத்தின் தொடக்கத்தில் சாம்சங் நிறுவனம், A80 ஸ்மார்ட்போனை ரிலீஸ் செய்தது. அப்போதே, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் A70 இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தது. 

சாம்சங் கேலக்ஸி A70 விலை:

சீனாவில் ப்ரீ-ஆர்டர் முறையில் சாம்சங் A70 விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி A70-யின் 6ஜிபி ரேம் மாடல், சுமார் 31,000 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், 8ஜிபி மாடல் சுமார் 34,000 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 
 

சாம்சங் இந்தியா தளத்தில் A70-க்கு என்று தனியாக ஒரு மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மைக்ரோசைட்டில் போனின் விலை குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் போனின் அனைத்து சிறப்பம்சங்கள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. A70-யின் மூன்று பின்புற கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆன்- ஸ்க்ரீன் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளிட்டவைகள் குறித்து மைக்ரோசைட்டில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 

இந்த மைக்ரோசைட் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் A70 சீக்கிரமே ரிலீஸ் செய்யப்படும் என்பதை யூகிக்க முடிகிறது. 

4 வித வண்ணங்களில் A70 விற்பனைக்கு வரும்

Advertisement

சாம்சங் கேலக்ஸி A70 சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்டு பை ஒன் யூ.ஐ-யில் இயங்கும், டூயல் சிம் ஸ்லாட் கொண்ட சாம்சங் கேலக்ஸி A70-யில் முழு ஹெச்.டி 6.7 இன்ச் ஸ்க்ரீன், சூப்பர் ஆமோலெட் இன்ஃபினிட்டி-யூ டிஸ்ப்ளே பேனல் இருக்கிறது. 20:9 ஆஸ்பக்ட் ரேஷியோவில் இது இயங்குகிறது. அக்டா-கோர் குவால்கம் ஸ்னப்டிராகன் 675 எஸ்ஓசி-யால் பவரூட்டப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி A70, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி வகைகளில் கிடைக்கும். 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வரும் இந்த போனில், 512 ஜிபி வரை சேமிப்பு வசதியைக் கூட்டிக் கொள்ளும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. 

போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 32, 8 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமராக்கள் பின்புறத்தில் இருக்கின்றன. அதேபோல முன்புறத்திலும் 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கிறது. 

Advertisement

ஆன்-ஸ்க்ரீன் ஃபிங்கர் பிரின்ட் கொண்டுள்ள A70, ஃபேஷியல் ரெகக்னிஷனையும பெற்றுள்ளது. 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த போனில் 25W சூப்பர் சார்ஜிங் உள்ளது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful Super-AMOLED display
  • Impressive slow-mo video recording
  • Good battery life and fast charging
  • Bad
  • Bulky and heavy
  • No camera night mode
  • No OIS or EIS
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 32-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.