Samsung Galaxy A70s, ஆரம்ப விலையான ரூ. 28,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
Samsung Galaxy A70s-ன் விலை குறைப்பு, இந்தியாவில் Galaxy A71 அறிமுகத்தின் ஒரு குறிப்பாக இருக்கலாம்
இந்தியாவில் Samsung Galaxy A70s-ன் விலை ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் Galaxy A71 அறிமுகமாகிறது என்ற வதந்திகளுக்கு மத்தியில் புதிய விலை வீழ்ச்சி வருகிறது. Galaxy A70s கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Samsung Galaxy A70s-ன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 28,999-யில் இருந்து ரூ. 25,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது Samsung India online store-ல் பிரதிபலிக்கும். Galaxy A70s-ன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையும் ரூ. 27,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது ரூ. 30,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோருக்கு கூடுதலாக, Amazon மற்றும் Flipkart நிறுவனங்களும் புதிய விலைகளைக் காட்டுகின்றன.
கேஜெட்ஸ் 360, விலைக் குறைப்பு குறித்த தெளிவுக்காக சாம்சங் இந்தியாவுக்கு எழுதியுள்ளது, மேலும் நிறுவனம் பதிலளிக்கும் போது இந்த இடத்தை புதுப்பிக்கும்.
டூயல்-சின் (நானோ) Samsung Galaxy A70s, One UI உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.7-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 6GB மற்றும் 8GB RAM ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது. போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 lens 64-மெகாபிக்சல் முதன்மை சென்சார், ultra-wide-angle lens உடன் 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5-மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
Samsung, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜை Galaxy A70s-க்கு வழங்குகிறது. இதனை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இதில் in-display fingerprint சென்சாரும் உள்ளது. தவிர, இந்த போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately