Samsung Galaxy Note 10 மற்றும் Galaxy S10 சீரிஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் விற்பனையின் கீழ் ரூ. 6,000 மதிப்புள்ள கேஷ்பேக்கை பெறுவார்கள்.
Flipkart விற்பனையின் கீழ் Samsung Galaxy A50-யின் விலை குறைக்கப்பட்டு ரூ. 14,999-க்கு கிடைக்கிறது
Samsung Galaxy A50, Galaxy S9, Galaxy A70 மற்றும் வேறு சில கேலக்ஸி போன்கள் பிளிப்கார்ட்டில் தள்ளுபடியைப் பெற்றுள்ளன. பல்வேறு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைக் கொண்டுவருவதற்காக ஆன்லைன் சந்தையில் சாம்சங் கார்னிவல் விற்பனையை (Samsung Carnival sale) நடத்துகிறது. டிசம்பர் 14 சனிக்கிழமை வரை நேரலையில் இருக்கும் இந்த விற்பனையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் போன்களில் கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் அடங்கும். பிளிப்கார்ட் விற்பனையின் போது Galaxy Note 10, Galaxy Note 10+, Galaxy S10, Galaxy S10+ மற்றும் Galaxy S10e ஆகியவற்றை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக no-cost EMI பரிவர்த்தனைகளில் கேஷ்பேக் பெறலாம்.
சாம்சங் கார்னிவல் விற்பனையின் கீழ் அனைத்து தள்ளுபடிகளையும் விவரிக்க பிளிப்கார்ட் microsite-ஐ உருவாக்கியுள்ளது. Samsung Galaxy A50 4GB RAM வேரியண்ட் ரூ. 18,490-யில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 14,999-க்கு கிடைக்கிறது என்பதை மைக்ரோசைட் காட்டுகிறது. இதேபோல், Galaxy A50 6GB RAM மாடல் ரூ. 17,990-யாக தள்ளுபடி விலையை பெற்றுள்ளது. இது அதிகாரப்பூர்வ விலைக் குறியீட்டுடன் ரூ. 21,490-க்கு வருகிறது.
Galaxy A50-ன் கூடுதலாக, Samsung Galaxy S9-ஐ ஆரம்ப விலையில் ரூ. 27.999-க்கு பிளிப்கார்ட் விற்பனை கொண்டுவருகிறது. ஸ்மார்ட்போன் வழக்கமாக ரூ. 29.999-க்கு சில்லறையில் விற்பனை செய்யப்படுகிறது.
பிளிப்கார்ட்டில் உள்ள சாம்சங் கார்னிவல் விற்பனை சில பிரபலமான Galaxy A-சீரிஸ் போன்களிலும் தள்ளுபடியைக் கொண்டுவருகிறது.
இவற்றில், Samsung Galaxy A70-யின் விலை ரூ. 28,990-யில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 23,990-க்கு கிடைக்கிறது. Samsung Galaxy A30-யின் விலை ரூ. 15,490-யில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Samsung Galaxy A20-யின் விலை குறைக்கப்பட்டு ரூ. 10,490-க்கு கிடைக்கிறது. இந்த கைப்பேசி பொதுவாக ரூ. 11,490-க்கு வருகிறது.
புதிய Galaxy A-சீரிஸ் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியையும் வழங்குகிறது. உதாரணமாக, Samsung Galaxy A50s கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியுடன் ரூ. 2,000-க்கு கிடைக்கிறது. அதேபோல் Samsung Galaxy A30s கூடுதலாக ரூ. 1,500 எக்ஸ்சேஞ் தள்ளுபடியுடன் வருகிறது.
| ஸ்மார்ட்போன் | வழக்கமான விலை (ரூ.) | தள்ளுபடி விலை (ரூ.) |
|---|---|---|
| Samsung Galaxy A50 4GB+64GB | 18,490 | 14,999 |
| Samsung Galaxy A50 6GB+64GB | 21,490 | 17,990 |
| Samsung Galaxy A70 6GB+128GB | 28,990 | 23,990 |
| Samsung Galaxy A30 4GB+64GB | 15,490 | 13,990 |
| Samsung Galaxy A20 3GB+32GB | 11,490 | 10,490 |
| Samsung Galaxy S9 4GB+64GB | 29,999 | 27,999 |
இதேபோல், Samsung Galaxy Note 10, Galaxy Note 10+, Galaxy S10, Galaxy S10+ மற்றும் Galaxy S10e ஆகியவற்றை no-cost EMI பரிவர்த்தனைகளில் வாங்கும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 6,000 கேஷ்பேக்கை பிளிப்கார்ட் விற்பனை வழங்குகிறது. ரூ. 199-க்கு கீழ் பல்வேறு சாம்சங் போன்களுக்கு back covers மற்றும் tempered glass ஆப்ஷனும் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Resident Evil Village, Like a Dragon: Infinite Wealth and More Join PS Plus Game Catalogue in January
Lava Blaze Duo 3 Confirmed to Launch in India Soon; Key Specifications Revealed via Amazon Listing
Lumio Vision 7, Vision 9 Smart TVs Go on Sale on Flipkart With Republic Day Offers