சாம்சங் தரப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி A71 மற்றும் A51 ஸ்மார்ட்போனில் ஃபிளாக்ஷிப் அளவிலான கேமராக்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இதர சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கேலக்ஸி A71 மற்றும் A51 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமே அதன் கேமரா தான். இந்த கேமராவில் ஒரே க்ளிக்கில் 10 விதமான போட்டோக்கள், வீடியோக்கள் பதிவாகின்றன. இதன்மூலம் எந்த ஒரு சிறு மொமெண்டுகளும் படம்பிடித்து விடும். வீடியோ விலாக்கர் செய்பவர்கள் ஒரே நேரத்தில் முன்பக்க கேமராக்களையும், பின்பக்க கேமராக்களையும் மாற்றிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் செல்ஃபி கேமரா ஆங்கிள் மூலமாக நல்ல கலர்புல்லான செல்பிக்கள் எடுக்க முடியும். இதற்கு முன்பு இந்த அம்சம் கேலக்ஸி S20 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் மட்டுமே இருந்து வந்தது. அதே அம்சம் தற்போது கேலக்ஸி A71 மற்றும் A51 ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட்டுள்ளது.
.
இதில் உள்ள டேப் டச் அல்லது ஷட்டர் மூலம் அதிகப்பட்சம் 10 மொமெண்டுகள், ஆக்ஷன்களைப் பதிவு செய்லயாம். இவற்றில் 7 படங்களாகவும், 3 வீடியோக்களாகவும் கேலரியில் பதிவாகின்றன. எனவே, போட்டோ, வீடியோ எடுப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
உதாரணத்திற்கு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தை நீங்கள் போட்டோ எடுக்கிறீர்கள் என்றால், ஒரே க்ளிக்கில் போட்டோ எடுத்தால் போதும். அதில் கேக் வெட்டுவது முதல் அலங்கார வெடி வெடிப்பது வரை அனைத்தும் பதிவாகிவிடும். அவற்றில் சிறந்த ஷார்டுகளை மட்டும் மெருகேற்றலாம். மற்றவர்களுக்கும் உடனடியாக ஷேர் செய்யலாம்.
அட்டகாசமான நைட் மோடு:
இதே போல் சாம்சங் A71, A51 ஸ்மார்ட்போன்களில் நைட் மோடும் பிரம்மாதமாக இருக்கிறது. லோ லைட் நிலைமகைளில், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள 'நைட் ஹைப்பர்லாப்ஸ்' அம்சத்தைப் பயன்படுத்தி போட்டோக்களை எடுக்கலாம். இதன் மூலம் இரவு நேர சூழல்களை இனிமையாக படம் பிடிக்கலாம்.
விதவிதமான ஃபில்டர்கள்:
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என பலவற்றிலும் புகைப்படங்களை ஷேர் செய்ய விரும்புகிறவர்கள், சாம்சங்கின் இந்த A51, A71 ஸ்மார்ட்போன் கச்சிதமாக பொருத்தமாக இருக்கும்
கேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் பவர்ஃபுல் ஹார்டுவேர் உள்ளது. இதில் 6.5 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளது. 4,000 mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி இருப்பதால் நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் நீடித்து உழைக்கிறது. கேமராவைப் பொருத்தவரையில் A51 ஸ்மார்ட்போனில் நான்கு கேராக்கள் உள்ளன. பிரைமரி கேமரா மட்டும் 48 மெகா பிக்சல் உள்ளது.
இதே போல், சாம்சங் கேலக்ருி A71 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் பிளஸ் டிஸ்பிளே உள்ளது. பிரைமரி கேமரா 64 மெகாபிக்சலுடன் உள்ளது. பேட்டரி சக்தி 4,500 mAh ஆகும். இதற்கு ஆதரவா 25W சார்ஜர் உள்ளது. மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசசர் இருப்பதால் ஸ்மார்ட்போனின் செயல்பாடுகள் சிறப்பாக அமைகிறது. .
Buy the Galaxy A51 and Galaxy A71 today!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்