ஒரே க்ளிக்கில் 10 விதமான போட்டோக்கள், வீடியோக்கள் பதிவாகின்றன. இதன்மூலம் எந்த ஒரு சிறு மொமெண்டுகளும் படம்பிடித்து விடும்
சாம்சங் A சீரிஸில் A51 மற்றும் A71 என புதிதாக இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் தரப்பில் முன்னனி நிறுவனமாக சாம்சங் திகழ்கிறது. புதுமையான தொழில்நுட்பங்கள், கண்னைக் கவரும் டிசைன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சாம்சங் தரப்பில் A சீரிஸில் தற்போது புதிதாக A71, A51 என்ற இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இது நடுத்தர வேரியண்ட் ஸ்மார்ட்போன் ஆகும்.
உங்களுக்கு குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வேண்டுமா? அப்படியென்றால் சாம்சங்கின் A71, 51 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பவர்ஃபுல் கேமராக்கள், பவர்ஃபுல் சாபட்வேர் அம்சத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த ஃபிளாக்ஷிப் லெவல் கேமராக்களின் அம்சங்களானது புகைப்படங்களை கச்சிதமாக எடுக்க உதவுகிறது. புரோபஷனல் கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களுக்கு இணையாக A71, A51 ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
![]()
இந்த கேமராவில் ஒரே க்ளிக்கில் 10 விதமான போட்டோக்கள், வீடியோக்கள் பதிவாகின்றன. இதன்மூலம் எந்த ஒரு சிறு மொமெண்டுகளும் படம்பிடித்து விடும். வீடியோ விலாக்கர் செய்பவர்கள் ஒரே நேரத்தில் முன்பக்க கேமராக்களையும், பின்பக்க கேமராக்களையும் மாற்றிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் செல்ஃபி கேமரா ஆங்கிள் மூலமாக நல்ல கலர்புல்லான செல்பிக்கள் எடுக்க முடியும்.
![]()
சாம்சங் கேலக்ஸி A71 இல் உள்ள கேமரா
.
கேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் பவர்ஃபுல் ஹார்டுவேர் உள்ளது. இதில் 6.5 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளது. 4,000 mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி இருப்பதால் நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் நீடித்து உழைக்கிறது. கேமராவைப் பொருத்தவரையில் A51 ஸ்மார்ட்போனில் நான்கு கேராக்கள் உள்ளன. பிரைமரி கேமரா மட்டும் 48 மெகா பிக்சல் உள்ளது.
இதே போல், சாம்சங் கேலக்ருி A71 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் பிளஸ் டிஸ்பிளே உள்ளது. பிரைமரி கேமரா 64 மெகாபிக்சலுடன் உள்ளது. பேட்டரி சக்தி 4,500 mAh ஆகும். இதற்கு ஆதரவா 25W சார்ஜர் உள்ளது. மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசசர் இருப்பதால் ஸ்மார்ட்போனின் செயல்பாடுகள் சிறப்பாக அமைகிறது. .
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
Apple, Amazon, Meta Among US Tech Giants Opposing Jio, Vi’s 6GHz Band Allocation Demand: Report