உங்கள் வாழ்வின் சிறப்பானத் தருணங்களை பாதுகாத்திட புகைப்படங்களும் வீடியோக்களும் உதவுகின்றன. நமது உலகத்தை படமெடுத்து நமது சுற்றாத்தார் உடன் பகிர்ந்து கொள்ள ஸ்மார்ட்போன்கள் உதவுகின்றன. புதுமையான கேமிரா நுட்பங்களுடன் மீண்டும் நம்மைக் கவரும் விதமாக சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் போன்கள் உள்ளன.
சாம்சங் தனது புதிய கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 ஸ்மார்ட்போன்களில் முதன்மைத் தரமான கேமிரா அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. கவர்ச்சிகரமான கேமிரா உடன் மட்டுமல்லாது கூடுதல் பயனுள்ள அம்சங்களையும் கொண்டுள்ளது. பெரும் முயற்சியின்றி அசத்தலான புகைப்படங்களை எடுக்க இந்த போன்கள் உதவும்.
சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்களில் உள்ள சில முக்கிய கேமிரா அம்சங்களை இங்கு விரிவாகக் காண்போம்:
இதற்கு முன் இல்லாத அளவில் ஒரு முறையில் நமது தருணங்களை புகைப்படம் எடுக்க:
ஒவ்வொரு முறையும் நாம் புகைப்படம் எடுக்க முற்படும் போதும் சரியான மோட் பயன்படுத்துவது குறித்து பெரிதாக நேரம் செலவழித்து யோசித்துக் கொண்டிருப்போம். ஒரு சிங்கிள் டேக் முறையில் உங்கள் தருணங்களை புகைப்படம் எடுத்துவிட்டு அடுத்தப் பணியை நீங்கள் தொடரலாம். இந்த அம்சம் சாம்சங் நிறுவனத்தின் முதன்மை சீரிஸ் சாதனங்களான கேலக்ஸி S20 சீரிஸ் போன்களில் இடம் பெற்றிருந்தது. ஆனால், தற்போது இந்த சிங்கிள் டேக் அம்சம் உங்களது கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்களிலும் இடம் பெற்றுள்ளது.
ஒரு சிறிய பொத்தானின் சிங்கிள் டேக் முறையைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு முறையிலான மென்பொருளின் மூலம் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். சிங்கிள் டேக் பயன்படுத்தி எடுக்கும் போது அந்த சூழலுக்கு ஏற்ப சிறந்த வெளிச்சத்தில் அதிகப்பட்சமாக உங்களால் 7 புகைப்படங்கள் மற்றும் 3 வீடியோக்களை எடுக்க முடியும். இதனுள் 'பெஸ்ட் மொமென்ட், ஃபில்டர்ஸ், ஸ்ஆர்ட் க்ராப், ஒரிஜினல் வீடியோ, ஹைப்பர் லாப்ஸ் மற்றும் பூமராங்' ஆகிய அம்சங்களும் அடங்கும்.
சிறந்த இரவு நேர வீடியோக்கள் எடுக்க உதவும் ‘நைட் ஹைப்பர்லாப்ஸ்':
குறைவான வெளிச்சம் நிலவினாலும் இப்புதிய ‘நைட் ஹைப்பர்லாப்ஸ்' அம்சம் சிறந்த வீடியோக்களைப் பதிவிட உதவும். உங்கள் சமுக வலைதளப்பக்கங்களில் உள்ளோரை அசத்த நினைத்தாலும், நண்பர்கள் அல்லது உங்கள் குடும்பத்தாரை மகிழ்விக்க நினைத்தாலும் ‘நைட் ஹைப்பர்லாப்ஸ்' முறையிலான வீடியோ அம்சத்தை சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்களில் உபயோகிக்கலாம்.
மேம்படுத்தப்பட்ட குறைந்த வெளிச்ச அம்சம் சிறப்பானதாகத் தோற்றமளிக்கும் நீண்ட வெளிப்பாட்டு வகையிலான வீடியோக்களை எடுக்க ஏற்ற புதிய மென்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களிடம் உள்ள கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்களைக் கொண்டே நீங்கள் ஒரு அசத்தலான முழுநேர புகைப்படக் கலைஞராக வரலாம்.
உங்கள் புகைப்படங்களுக்கு ஏற்ற பிரத்யேக ஃபில்டர்கள்:
நீங்கள் ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்கள் எடுக்க வழக்கமான ஒரே மாதிரியான ஃபில்டர்களே இருக்கும். பல போன்களில் பிரத்யேகமான ஃபில்டர்கள் இடம் பெற்றிருக்காது. ஆனால், சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்களில் இத்தகைய பிரத்யேக ஃபில்டர்கள் அம்சம் வழங்கப்பட்டுள்ளன.
உங்களுக்குப் பிடித்தமான புகைப்படங்களுக்கு ஏற்ற பிரத்யேக ஃபில்டர்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் எடுத்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துக்காக புதிய ஃபில்டர்களை உருவாக்கி நிறத்தையும் தரத்தையும் உருவாக்குங்கள். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானலும் பிரத்யேக ஃபில்டர்களைப் பாதுகாக்கலாம். இது பின்னர் உபயோகிக்க உதவும் வகையில் உங்கள் கேமிரா ஆப்-ல் பாதுகாக்கப்படும்.
உங்கள் செல்ஃபி கூடுதல் சிறப்பானதாக மாற ஸ்மார்ட் செல்ஃபி ஆங்கிள்:
அத்தனை ஸ்மார்ட்போன்களும் உங்களுக்கு செல்ஃபி எடுக்க உபயோகமாகும். ஆனால், உங்கள் நண்பர்களுடன் இணைந்து செல்ஃபி எடுக்க நினைக்கும் போதுதான் உங்களிடம் உள்ள ஸ்மார்ட்போன் உங்களை வீழ்த்திவிடும். சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்களில் புதிய ஸ்மார்ட் செல்ஃபி ஆங்கிள் அம்சம் தானியங்கியாகவே உங்கள் கேமிராவை அகலப்படுத்தி அதிக நண்பர்களை உங்கள் செல்ஃபி-க்குள் இணைக்க உதவும்.
உங்கள் நண்பர்கள் உடனான செல்ஃபி புகைப்படத்தில் யாரொருவரின் முகமும் விடுபடாமல் மிகவும் தெளிவாக எடுக்க ஸ்மார்ட் செல்ஃபி ஆங்கிள் உதவுவதால் அந்த செல்ஃபி புகைப்படங்களை நீங்கள் பரவலாக அழகு குறையாமல் பகிரலாம். மேனுவல் முறையிலும் உங்கள் செல்ஃபி மோட் மாற்ற முடியும்.
சிறப்புத் தருணங்களைத் தவறவிடாது இருக்க ‘க்விக் வீடியோ':
எதிர்காலங்களில் மிகவும் நீண்ட காலம் நீங்கள் பாதுக்காக்க நினைக்கும் நினைவுகளை ‘க்விக் வீடியோ' அம்சம் மூலம் விரைவில் பதிவு செய்யலாம். நீங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போதும் மிகவும் எளிய முறையில் சுலபமாக வீடியோக்களை எடுக்கலாம்.
லைவ் வீடியோ மற்றும் வ்லாகிங் செய்ய ‘ஸ்விட்ச் கேமிரா':
சாம்சங் கேலக்ஸி A51 போனில் நீங்கள் வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கும் போதே மிகவும் எளிதாக முன் மற்றும் பின்புற கேமிராக்களுக்குத் தாவ முடியும். இதற்காக நீங்கள் வீடியோ பதிவை நிறுத்தி பின்னர் தொங்கத் தேவையில்லை. இது உங்கள் வசதியையும் வீடியோ திறனையும் மேம்படுத்தும். வாழ்க்கை முறைகளை எளிதாக்க இத்தகைய அம்சம் உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும். லைவ் வீடியோ பதிவை மேற்கொள்ளும் போதும் இந்த அம்சம் உதவும். உங்கள் நண்பர்களுடன் லைவ் வீடியோ மூலம் கலந்துரையாடும் போதே முன், பின் கேமிராக்களை நீங்கள் மாற்றி இரு வெவ்வேறு உலகங்களையும் காட்டலாம்.
பழைய புகைப்படங்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு கேலரி ஜூம்:
தெளிவில்லாத புகைப்படமா? உங்களது தெளிவில்லாத புகைப்படங்களின் தரத்தை உயர்த்த சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்கள் உதவும். குறைந்த தரத்திலான புகைப்படங்களை கூடுதல் தெளிவாகவும் அழகாகவும் மாற்ற AI கேலரி ஜூம் அம்சம் உதவும். உங்களது ஸ்மார்ட்போன் மூலமாகவே அத்தனை வித்தைகளையும் நீங்கள் செய்யலாம்.
உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து நீங்கள் மீண்டும் உபயோகிக்க நினைக்கும் புகைப்படங்களை அழகாக்க AI கேலரி ஜூம் அம்சம் சிறப்பாகப் பயன்படும். உங்களது தெளிவில்லா புகைப்படங்களை சமுக வலைதளங்களில் நீங்கள் பதிய நினைத்தாலும் இத்தைகய அம்சம் உங்கள் புகைப்படத்தை அழகாக்கும்.
இந்த அத்தனை சிறப்பு அம்சங்களுடன் உங்களை மிகச்சிறந்த தொழில் ரீதியிலான புகைப்படக் கலைஞராக மாற்ற சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்கள் உதவும். இப்புதிய கவர்ச்சிகரமான அம்சங்கள் அனைத்தும் எளிதாகக் கிடைப்பதற்கு உதவிய எளிதான மென்பொருள் மேம்பாடுகளுக்கு நன்றி.
திரைக்குப் பின்னாலான அத்தனை மாயாஜாலங்களுக்கும் கேமிரா ஹார்டுவேர்:
சாம்சங் கேலக்ஸி A51 போன் 48 மெகா பிக்சல்கள் உடன் க்வாட் கேமிரா முறையிலும் கேலக்ஸி A71, 64 மெகா பிக்சல்கள் உடன் க்வாட் ரியர் கேமிரா முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ கேமிரா, டெப்த் சென்சார் ஆகியன உள்ளன. இவை அனைத்தும் சிறந்த தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.
நெருக்கமானவற்றை புகைப்படம் எடுப்பதிலிருந்து உங்கள் நைட் மோட் புகைப்படங்களை பதிவிடுவது வரை அத்தனையையும் இந்த கேமிராக்கள் செய்யும். எந்தவொரு தருணத்தையும் கூடுதல் சிறப்பானதாக்க இந்த சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்கள் உதவும்.
உங்கள் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் அத்தனையையும் ஆராய மிகவும் திறன் வாய்ந்த செயலியும் சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 போன்களில் உள்ளன. உங்கள் விருப்பமான கேம்ஸ் முதல் பிரபலமான டிவி நிகழ்ச்சிகளைக் காணுவது வரையில் அத்தனைக்கும் இந்த போன்கள் ஏற்றது. நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி மற்றும் அசாத்திய திரை கூடுதல் சிறப்பு. அருகிலிருக்கும் சாம்சங் விற்பனைத் தளங்கள், ஆன்லைன் தளம், அமேசான் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களிலும் நீங்கள் எளிதாக இந்தப் போன்களை வாங்கலாம்.
Buy the Galaxy A51 and Galaxy A71 today!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்