ரெட்மி நோட் 9 ப்ரோ ஃபிளாஷ் விற்பனைக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இன்று மீண்டும் அதை வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மார்ச் மாதத்தில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இந்த போனை Amazon மற்றும் mi.com-ல் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு ஆர்டர் செய்யலாம்.
இந்தியாவில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 9 புரோவின் விலை ரூ.13,999 ஆகும். போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999-யாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். Amazon மற்றும் mi.com-ல் இருந்து மதியம் 12 மணிக்கு தொடங்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த போனை ஈ.எம்.ஐ.யில் வாங்கினால், உங்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.
டூயல்-சிம் Redmi Note 9 Pro, நிறுவனத்தின் MIUI 11 உடன் Android 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே Qualcomm's ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் வைவ்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த போனின் உள்ளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 5,020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்