நாளை விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 11 மே 2020 12:09 IST
ஹைலைட்ஸ்
  • இந்த போன் 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது
  • இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
  • ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மூன்று கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC-யால் இயக்கப்படுகிறது

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் முதல் விற்பனை நாளை நடைபெறவுள்ளது. இந்த போன் மார்ச் மாதம் இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் விற்பனை ஊரடங்கால் தாமதமானது. ஷாவ்மி தற்போது நாட்டில் ஸ்மார்ட்போன்களை மறுவிற்பனை செய்யத் தொடங்கியது. 

Xiaomi, Redmi, Poco Phones Get a Price Hike as Increased GST Rate Comes Into Effect


போனின் விலை: 

இந்தியாவில் Redmi Note 9 Pro Max-ன் ரூ. 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.16,499 ஆகும். அதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.17,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 ஆகும்.
இந்த போன் ப்ளூ, வெள்ளை மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் கலர் ஆப்ஷனகளில் கிடைக்கும். 

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸின் முதல் விற்பனை மே 12 ஆம் தேதி (நாளை) நடைபெறும். இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு Mi.com மற்றும் Amazon.in, Xiaomi-யில் தொடங்கும். Mi.com மற்றும் Amazon.in-ல் இருந்து போன் வாங்குவோர்க்கு, ஏர்டெல், டபுள் டேட்டா பலன்களை வழங்குகிறது.

Redmi, Mi, Poco Phones Now on Sale via Online Platforms in Green and Orange Zones

போனின் விவரங்கள்: 

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ், நிறுவனத்தின் MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.67 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G SoC-யால் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யலாம்.

போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் குவாட் கேமரா அமைப்பில், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். போனில் RAW புகைப்படம் எடுப்பதற்கான ஆதரவும் உள்ளது. செல்ஃபி எடுக்க முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்-ல் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பிற்காக 4ஜி வோல்டி, வை-ஃபை 802.11ac, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், அகச்சிவப்பு (ஐஆர்), நாவிக், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளது.


Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Bundled fast charger
  • All-day battery life
  • Good cameras
  • Bad
  • Big and bulky
  • Preinstalled bloatware
  • Average low-light video recording
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  2. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  3. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  4. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
  5. அதிர்ச்சி! Vivo X Fold 5 விலை ₹1.5 லட்சம்! X200 FE-ல் 6500mAh பேட்டரி - லீக் தகவல்கள் இதோ!
  6. Apple-ன் அடுத்த மாஸ்டர்பீஸ்: iPhone 17 Pro Max-ல் பேட்டரி புரட்சி! நீண்ட நேரம் யூஸ் பண்ணலாமா?
  7. Honor X9c 5G: ஜூலை 7-ல் இந்திய லான்ச்! 108MP OIS கேமரா, 6600mAh பேட்டரியுடன் மிரட்ட வருகிறது!
  8. Amazon Prime Day Sale: எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 65% வரை ஆஃபர்! பேங்க் சலுகைகளுடன் அசத்துகிறது!
  9. నథింగ్ ఫోన్ 3 స్మార్ట్‌ఫోన్ Android 15 ఆధారంగా రూపొందించిన నథింగ్ OS 3.5 పై రన్ అవుతుంది
  10. Nothing Headphone 1: 80 மணி நேர பேட்டரி லைஃப், டிரான்ஸ்பரண்ட் டிசைனுடன் இந்தியாவில் லான்ச்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.