Photo Credit: Weibo
ரெட்மி நோட் 8 Pro பற்றிய ஒரு புதிய டீஸர் வெளியாகியுள்ளது. அந்த டீஸர் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் 25x ஜூம் திறன் கொண்டுள்ளது என்பதை குறிக்கிறது. டீஸரில் ஒரு கிளியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது, மேலும் புகைப்படத்தை 25 முறை பெரிதாக்கும்போது கூட ஸ்மார்ட்போனில் ‘ஹேர் லெவல்' தெளிவை உருவாக்க முடியும் என குறிப்பிடுகிறது. இது உண்மையாக இருந்தால், ரெட்மி நோட் 8 Pro ஸ்மார்ட்போன் வரவிருக்கும் ரெனோ 2 - 20x ஜூம் ஸ்மார்ட்போனைவிட அதிக ஜூம் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும்.
ரெட்மி நோட் 8 Pro வில் உள்ள 64 மெகாபிக்சல் சென்சார் 25x ஜூம் திறனை கொண்டிருக்கும் என்று சமீபத்திய டீஸர் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன் "அதி-தெளிவான படத் தரத்தை வழங்கும்", மேலும் 25 முறை பெரிதாக்கும்போது கூட விவரங்களை இழக்காது. 64 மெகாபிக்சல் கேமராவால் 9248x6936 பிக்சல் தெளிவான படங்கள் எடுக்க முடியும் என்று கூறும் மற்றொரு டீஸரும் வெளியாகியுள்ளது. இது FHD-யுடன் ஒப்பிடுகையில் 25x தெளிவுத்திறனுக்கு சமம், மேலும் 8K தரத்தைவிட இரண்டு மடங்கு அதிகமானது ஆகும்.
ரெட்மி நோட் 8 Pro ஹீலியோ ஜி 90 டி செயலி மூலம் இயக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Pro வேரியண்ட் நேரடி படங்களில் கசிந்துள்ளது மற்றும் இது மூன்று பின்புற கேமரா அமைப்பு, பின்புற ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது, ரெட்மி நோட் 8 அதிக திரை முதல் உடல் விகிதம், பெரிய பேட்டரி மற்றும் மிக முக்கியமாக, சிறந்த படத் தரம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. ரெட்மி நோட் 8 Pro 64 மெகாபிக்சல் பின்புற முதன்மை கேமரா சென்சாரை கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் ரெட்மி நோட் 8 -ல் இந்த அம்சம் இருக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
ரெட்மி நோட் 8 Pro மற்றும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29-ல் சீனாவில் அறிமுகமாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்