Photo Credit: Weibo/ Lei Jun
சியோமி நிறுவனம், சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள புதுப் புது யுக்திகளைக் கையாண்டு கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை தன் புதிய மொபைல் போனை சந்தையில் விற்பனைக்கு உட்படுத்துகையில், அந்த ஸ்மார்ட் போன்கள் விற்றுத் தீர்க்க பல வியாபார தந்திரங்களை பயன்படுத்தி வருகிறது சியோமி. அப்படி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை வெளியிடுகையில் அதன் ஸ்திரத்தன்மையை நிரூபிக்க அந்த போனை ஊழியர்கள் படிக்கட்டுகளில் கீழே போட்டு விளையாடியவாரும், அந்த மொபைல் போனை வைத்து காய்கறிகள் வெட்டியவாரும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. தற்போது, தன் வியாபார யுக்தியை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது சியோமி நிறுவனம். அதன்படி தனது ஸ்மார்ட் போனான ரெட்மி நோட் 7-ஐ விண்வெளிக்கு அனுப்பி வைத்து சோதனை நடத்தியுள்ளது இந்த நிறுவனம். அதன்படி 31,000 மீட்டர் உயரத்தில் சில அற்புதமான புகைப்படங்களை எடுத்துள்ளது இந்த நோட் 7.
இதுகுறித்து சியோமியின் தலைமை நிர்வாக அதிகாரி லெய் ஜுன்(Lei Jun), "லிட்டில் கிங் காங்" ஏன்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு பலூனின் வாயிலாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டுள்ளது இந்த நோட் 7. முன்புறம் மற்றும் பின்புறம், ஆகிய இரு பக்கங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொறுத்தப்பட்ட இந்த போனின் நிலைதன்மையை இன்னும் கூட்டவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்த நிறுவனம். அதே நேரத்தில் தனது ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7 கேமராவின் சிறப்பான செயல்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது இந்த முயற்சி.
பலூனில் கட்டப்பட்டிருந்த இந்த மொபைல்போன், 35,375 மீட்டர் உயரம் வரை பயணித்துள்ளது. அதன் பின் அதிக வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக பலூன் வெடித்ததைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்பொன் கீழே விழுந்துள்ளது. அதுவரை பயணித்த இந்த ஸ்மார்ட்போன், விண்வெளியில் சில அற்புதமான காரியங்களை செய்துள்ளது. அதிகபட்சமாக உட்புற வெப்பமாக 9 டிகிரி செல்சியஸும், வெளிப்புற வெப்பமாக -56 டிகிரி செல்சியஸையும் தாங்கியுள்ளது. இது ஸ்மார்ட்போன்கள் உலகில் ஒரு மைல்கல்தான்.
அதே சியோமி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில அற்புதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. அது அந்த மொபைல் போனால் எடுக்கப்பட்டதுதான். சுமார் 31,000 மீட்டர் உயரத்தில் இருந்து பூமியை நோக்கி எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. 48 மெகா பிக்சல் என்று கேமரா பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் இது சீனாவில் வெளியான ரெட்மி நோட் 7 எனத் தெரிய வருகிறது.
Some stellar space shots by #RedmiNote7. #48MPforEveryone gives you the bigger picture. pic.twitter.com/9pfZ2x64ED
— Xiaomi #5GIsHere (@Xiaomi) May 5, 2019
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்