இன்று ரெட்மி நோட் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த அறிமுக நிகழ்ச்சியில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என எதிர்பார்கப்படுகிறது.
இன்று மதியம் 12 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியை மக்களுக்காக லைவ் ஸ்ட்ரிமிங் செய்யப்படுகிறது. சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரெட்மி நோட் 7, 48 மெகா பிக்சல் சாம்சங் பிரைட் GM1 சென்சாரை கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சியோமி தனது தளத்தில் இந்த போனின் சிறப்பம்சங்களை கொண்டுள்ள மைக்ரோ சைட்டுகளை கொண்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான தகவல் ஓன்றில் இன் டிஸ்பிளே- ஃபிங்கர் பிரின்ட், இந்த போனில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ விலை (எதிர்பார்க்கப்படுபவை)
ரெட்மி நோட் 7 (3ஜிபி ரேம்/32 ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட தயாரிப்பு இந்தியாவில் ரூ.10,600க்கு வெளியாகும் என்றும் (4ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட) தயாரிப்பு ரூ.12,800க்கும், இறுதியாக ரூ.14,900க்கு ரெட்மி நோட் 7 தயாரிப்பான (6 ஜிபி ரேம்/64ஜிபி) விற்பனை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தயாரிப்பு டுவைலையிட் கோல்டு, ஃபான்டஸி ப்ளூ மற்றும் பிரைட் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளன. ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் தகவல்கள் இன்னும் அரியப்படாத நிலையில் இந்தியாவில் அந்த போன் ரூ.21,300 க்கு வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.
ரெட்மி நோட் 7 அமைப்புகள்:
இந்த ரெட்மி நோட் 7 சியோமி தயாரிப்புகளுக்குக் கீழ் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். 6.3 இஞ்ச் ஹெச்டி திரையைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பின் ரேம் வசதி 6 ஜிபியாக உள்ள நிலையில் சேமிப்பு வசதி 64 ஜிபியாக இருக்கிறது.
பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் இருக்கின்ற நிலையில், 48 மெகா பிக்சல் சாம்சங் ப்ரைட் GM1 சென்சாரை தனது முதுற்கட்ட சென்சாராகவும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சாரையும் இந்த போன் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிக்காக 13 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் வசதியாக ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சியோமி ரெட்மியின் இந்த புதிய தயாரிப்பு 4,000mAh பேட்டரி பவரும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)
சியோமி நிறுவனம் சார்பில் ரெட்மி நோட் 7 ப்ரோ பற்றிய முக்கிய தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இன்று வெளியாகயுள்ள ரெட்மி நோட் 7 போனின் முக்கிய சிறப்பம்சங்களை ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் கொண்டிருக்கலாம் என எதிர்பார்கபடுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் கொண்ட சோனி IMX586 முதற்கட்ட சென்சார் இருப்பதாகவும் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் வெளியான தகவல்படி, ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் விற்பனைக்கு வரும் எனப்படுகிறது. ரெட்மி நோட் 7 ப்ரோ தயாரிப்புகள் கறுப்பு, கிரேடியன்ட் ப்ளூ மற்றும் கிரேடியன்ட் சிவப்பு ஆகிய நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்