சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ (ரூ.12,999) வெள்ளியன்று தன்னுடைய முதல் விற்பனையை தொடங்கியது. 6 லட்சம் யூனிட் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விற்பனையாகி உள்ளதாக சியோமி கூறியுள்ளது. சீன நிறுவனமான சியோமி இன்று மட்டும் ரூ.1000 தள்ளுபடி வழங்கியுள்ளது.
ஹெச்டிஎஃப்சி கிரேடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு உடனடியாக ரூ. 500ஐ தள்ளுபடி செய்கிறது. மேலும், இந்த சேல் பிளிப்கார்ட், Mi.com மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர்ஸிலும் வாங்கலாம்.
சியோமி இந்தியாவின் குளோபல் இணை இயக்குநர், மனு குமார் ஜெயினின் டிவிட்டர் பதிவில், எம்.ஐ வாடிக்கையாளர்களே சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின் முதல் விற்பனையிலேயே இதுவரை நாம் 600000+ யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
நொடிப்பொழுதில் விற்பனையாகி விட்டது. இதனால் நீங்கள் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வாங்க முடியாமல் போயிருந்தால், கவலைப்பட வேண்டாம், இன்று மதியம் 3 மணிக்கு இரண்டாவது சேலினை தொடங்க உள்ளோம் என்று கூறியிருந்தார்.
ரெட்மி நோட் 5 ப்ரோவின் (ரூ.13,294) வாரிசு ரெட்மி நோட் 6 ப்ரோவாகும் இதில் ஒரு சில அப்கிரேட் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அதில், முன்பக்கம் இருக்கக்கூடிய டூயல் கேமரா, பெரிய டிஸ்பிளே, பி2ஐ நீரை விரட்டும் நானோ தொழில்நுட்பம் MIUI 10 ஆகும்.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்டி+ஐபிஎஸ் எல்.இ.டி ஸ்கீரின் டிஸ்பிளே 1080*2280 பிக்சலைக் கொண்டது. இதன் பிரகாசம் 500 என்.ஐ.டிஎஸ் ஆகும். 19:9 என்ற வீதத்தில் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.
முன்பக்கம் இருக்கும் கேமிரா 20 மெகா பிக்சலுடன் பிரைமரி சென்சாரைக் கொண்டுள்ளது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட செகண்டரி சென்சாருடன் 4இன் 1 சூப்பர் பிக்சல் மற்றும் ஏஐ ஃபேஸ் அனலாக் வசதியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் 1.4 மைக்ரான் பிக்சல் மற்றும் ஏஐ 2.0-வைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்