முதல் விற்பனையிலே 6 லட்சம் யூனிட்டுகள் விற்று தீர்ந்த ரெட்மி நோட் 6 ப்ரோ!

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ (ரூ.12,999) வெள்ளியன்று தன்னுடைய முதல் விற்பனையை தொடங்கியது

முதல் விற்பனையிலே 6 லட்சம் யூனிட்டுகள் விற்று தீர்ந்த ரெட்மி நோட் 6 ப்ரோ!
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின் ஆரம்பவிலை ரூ. 13,999
  • பிளாக் ஃப்ரைடே சேலில் இதன் விலையில் ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது
  • ரெட்மி நோட் 6 ப்ரோவிற்கு ஹெச்டிஎஃப்சி ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது
விளம்பரம்

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ (ரூ.12,999) வெள்ளியன்று தன்னுடைய முதல் விற்பனையை தொடங்கியது. 6 லட்சம் யூனிட் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விற்பனையாகி உள்ளதாக சியோமி கூறியுள்ளது. சீன நிறுவனமான சியோமி இன்று மட்டும் ரூ.1000 தள்ளுபடி வழங்கியுள்ளது.

ஹெச்டிஎஃப்சி கிரேடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு உடனடியாக ரூ. 500ஐ தள்ளுபடி செய்கிறது. மேலும், இந்த சேல் பிளிப்கார்ட், Mi.com மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர்ஸிலும் வாங்கலாம்.

சியோமி இந்தியாவின் குளோபல் இணை இயக்குநர், மனு குமார் ஜெயினின் டிவிட்டர் பதிவில், எம்.ஐ வாடிக்கையாளர்களே சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின் முதல் விற்பனையிலேயே இதுவரை நாம் 600000+ யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

நொடிப்பொழுதில் விற்பனையாகி விட்டது. இதனால் நீங்கள் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வாங்க முடியாமல் போயிருந்தால், கவலைப்பட வேண்டாம், இன்று மதியம் 3 மணிக்கு இரண்டாவது சேலினை தொடங்க உள்ளோம் என்று கூறியிருந்தார்.

ரெட்மி நோட் 6 ப்ரோவின் முக்கியம்சங்கள்

ரெட்மி நோட் 5 ப்ரோவின் (ரூ.13,294) வாரிசு ரெட்மி நோட் 6 ப்ரோவாகும் இதில் ஒரு சில அப்கிரேட் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அதில், முன்பக்கம் இருக்கக்கூடிய டூயல் கேமரா, பெரிய டிஸ்பிளே, பி2ஐ நீரை விரட்டும் நானோ தொழில்நுட்பம் MIUI 10 ஆகும்.

பெரிய மற்றும் பிரகாசமான டிஸ்பிளே

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்டி+ஐபிஎஸ் எல்.இ.டி ஸ்கீரின் டிஸ்பிளே 1080*2280 பிக்சலைக் கொண்டது. இதன் பிரகாசம் 500 என்.ஐ.டிஎஸ் ஆகும். 19:9 என்ற வீதத்தில் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

முன்பக்கம் இருக்கும் கேமிரா 20 மெகா பிக்சலுடன் பிரைமரி சென்சாரைக் கொண்டுள்ளது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட செகண்டரி சென்சாருடன் 4இன் 1 சூப்பர் பிக்சல் மற்றும் ஏஐ ஃபேஸ் அனலாக் வசதியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் 1.4 மைக்ரான் பிக்சல் மற்றும் ஏஐ 2.0-வைக் கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »