ஜனவரி 30 வரை இருக்கும் இந்த சேலில் ரெட்மி நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புக்களின் விலை குறைந்துள்ளது.
 
                தள்ளுபடி விலையில் எம்.ஐ போன்கள்
தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனம் சார்பாக நடந்து வரும் 'எம்ஐ டேஸ்' சேலில் பல தள்ளுபடியில் பல ரெட்மீ ஸ்மார்ட்போன்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றனர். ரெட்மீ நோட் 6 ப்ரோ, ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் போகோ F1 ஆகிய போன்கள் தள்ளுபடி விலைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. ரெட்மீ 6 ஸ்மார்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், அவர்களது பழைய போன்களை எஃஸ்சேன்ஞ் செய்து கூடுதலாக ரூ.500 தள்ளுபடியை பெறலாம். மேலும் இந்த எம்ஐ போன்களை வட்டியில்லா தவணை திட்டத்தின் மூலமாகவும் செலுத்த முடியும். அத்துடன் ஹெச்டிஎப்சி டெபிட் கார்டு வைத்து ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி கிடைக்கிறது.
மேலும் ப்ளிப்கார்டின் இந்த தள்ளுபடி சேல்களின் மூலம் 4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மீ நோட்6 ப்ரோ மாடல் போன்கள் 12,999 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல் கடந்த ஆண்டு ரூபாய் 15,999க்கு விற்பனைக்கு வந்த ரெட்மீ நோட் 6 ப்ரோ (6 ஜிபி ரோம்) தற்போது 14,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எஃஸ்சேன்ஞ் செய்தால் 14,900 ரூபாய் வரை தள்ளுபடி பெற முடியும். மேலும் இந்த சேலில் விற்பனை செய்யப்படுகிற ரெட்மீ நோட் 5 ப்ரோ (4 ஜிபி ரேம்) கடந்த தள்ளுபடி விலையை விட 2000 ரூபாய் விலை குறைந்து 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையளர்கள் தங்களது பழைய போன்களை எஃஸ்சேன்ஞ் செய்து 12,600 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். மேலும் வட்டியில்லா தவணை முறை மூலம் போன்களை வாங்கினால், மாதம் தோறும் ரூ.2,167 செலுத்த முடிகிறது.
இந்த 'எம்ஐ டேஸ்' சேலில் போகோ F1 (6 ஜிபி ரேம்/64 ஜிபி நினைவகம்) கொண்ட மாடல் ஸ்மார்ட்போன் 18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல போகோ F1 (6ஜிபி ரேம்/ 123 ஜிபி நினைவகம்) கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.21,999 க்கும், போகோ F1 (6ஜிபி ரேம்/ 256 ஜிபி நினைவகம்) ரூ.25,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சலுகைகள் ஆன்லைனில் பணத்தை செலுத்துபவர்களுக்கு மட்டுமே ரூ.20,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த போகோ F1 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ரூ.1000 வரை விலை குறைந்துள்ளது.
மேலும் சியோமி நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் ரெட்மீ 6 ஸ்மார்ட்போனின் விலையை நிரந்திரமாக வைத்துள்ளது. 32 ஜிபி நினைவகத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,999 வரை விலை குறைக்கப்பட்டது. அதுபோல 64 ஜிபி நினைவகத்தை கொண்ட மாடலும் ரூ.8,999 ஆக விலை குறைக்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 Samsung Internet Browser Beta for Windows PCs Launched with Galaxy AI Integration
                            
                            
                                Samsung Internet Browser Beta for Windows PCs Launched with Galaxy AI Integration
                            
                        
                     WhatsApp Announces Passkey-Encrypted Chat Backups With Biometric Authentication for Extra Security
                            
                            
                                WhatsApp Announces Passkey-Encrypted Chat Backups With Biometric Authentication for Extra Security
                            
                        
                     Apple CEO Tim Cook Forecasts Holiday Quarter iPhone Sales That Top Wall Street Estimates
                            
                            
                                Apple CEO Tim Cook Forecasts Holiday Quarter iPhone Sales That Top Wall Street Estimates
                            
                        
                     Realme GT 8 Pro India Launch Date Tipped After Company Confirms November Debut
                            
                            
                                Realme GT 8 Pro India Launch Date Tipped After Company Confirms November Debut