அமேசான் மற்றும் எம் ஐ தளங்களில் மே 31-ஆம் தேதி வரை இந்த விற்பனை நடக்கவுள்ளது
எம் ஐ சூப்பர் சேல்: அமேசான் மற்றும் எம் ஐ தளங்களில்!
இந்தியாவில் 'எம் ஐ சூப்பர் சேல்'-ஐ அறிவித்துள்ள இந்த நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களின் விலையில் தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த வார வெள்ளிக்கிழமையான மே 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த சூப்பர் சேலில், ரெட்மீ நோட் 6 Pro, ரெட்மீ நோட் 5 Pro, ரெட்மீ 6 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்மீ 6A, ரெட்மீ 6 Pro, ரெட்மீ Y2 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தன் தளத்தில் 'Mi சூப்பர் சேல்' என்று பெயரிட்டு இந்த விற்பனையை மேற்கொண்டுள்ளது எம் ஐ நிறுவனம். அமேசான் நிறுவனமோ, தன் தளத்தில் நடக்கும் இந்த சலுகை விற்பனைக்கு 'Mi டேஸ் சேல்' என பெயரிட்டுள்ளது. மேலும், அமேசான் நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் அமேசான் பே பேலன்ஸ் என பல சலுகைகளை வழங்கியுள்ளது.
இந்த விற்பனையில் விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ!
இந்த சலுகை விற்பனை நாட்களில் 10,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 5 Pro'. அதே நேரம் இதன் மற்றொரு வகையான 6GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ரெட்மீ நோட் 5 Pro-வின் விலை 11,999 ரூபாய் மட்டுமே. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் மற்றும் 13,999 ரூபாய் விலைகளில் விற்பனையில் இருந்தது.
13,999 ரூபாயாக இருந்த ரெட்மீ நோட் 6 Pro, தற்போது 11,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
![]()
ஒருவேளை உங்களுக்கு ரெட்மீ நோட் ஸ்மார்ட்போன்கள் மீது ஆர்வம் இல்லையெனில், மற்ற போன்களுக்கும் சலுகைகளை வழங்கியுள்ளது ரெட்மீ நிறுவனம். இரண்டு வகைகள் கொண்ட 'ரெட்மீ 6 Pro'-வில், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலையை 8,999 ரூபாய் எனவும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் எனவும் குறைக்கப்பட்டுள்ளது.
ரெட்மீ 6 தொடரிலுள்ள மற்ற இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், 3GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ 6' 7,499 ரூபாயும், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ 6A' 6,999 ரூபாய் என்ற விலையிலிருந்து 6,499 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
'ரெட்மீ Y2' ஸ்மார்ட்போனின் விலையையும் குறைத்து அளித்துள்ள இந்த விற்பனையில், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு 'ரெட்மீ Y2'-வின் விலை 9,999 ரூபாய். மேலும், 3GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ Y2'-வின் விலை 8,999 ரூபாய்.
மேலும் எக்ஸ்சேஞ்ச் செய்து 'எம் ஐ A2' மற்றும் 'போகோ F1' ஆகிய ஸ்மார்ட்போன்களை பெற்றால் 2,000 ரூபாய் மற்றும் 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது.
Can Redmi Note 6 Pro beat the Nokia 6.1 Plus and Zenfone Max Pro M1? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Ghost of Yotei Is Getting New Game Plus Mode in a Free Patch This Month
Vivo X200T Tipped to Launch Soon; Said to Be Similar to Vivo X200 FE With Few Hardware Changes