ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி Y2 ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு தள்ளுபடி விலை அறிவிப்பு!
இந்த சியோமி சேல் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சியோமி நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையின்படி வரும் சில நாட்களுக்கு ஒரு தள்ளுபடி சேல் நடத்தப்பட உள்ளது. இந்த சேலின்படி ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி Y2 ஆகிய போன்களுக்கு இந்த அதிரடி விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்வரி மாதம் 26 ஆம் தேதி தொடங்கப்பட்ட போன்களுக்கான இந்த சலுகை விற்பனை, அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் போன்ற தளங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சேல் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெறுகின்ற நிலையில், வங்கிகளின் வட்டியில்லா தவணைத் திட்டம், போன்ற பல சிறப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
தள்ளுபடி விற்பனையையொட்டி ரெட்மி நோட் 6 ப்ரோ (4ஜிபி) ரூ.13,999-இல் இருந்து ரூ.11,999க்கு குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. 6ஜிபி மாடலை பொறுத்தவரை ரூ15,999யிலிருந்து குறைந்து ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த 2000 ரூபாய் தள்ளுபடி ஃபிளிப்கார்ட் மட்டும் எம்ஐ.காம் ஆகிய தளங்களில் மட்டுமே கிடைக்கிறது.
ரெட்மி நோட் 5 ப்ரோ பொறுத்தவரை 4ஜிபி வகை ஸ்மார்ட்போன் ரூ.10,999 க்கும், 6ஜிபி வகை ரூ.11,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த போன்கள் ரூ.12,999 மற்றும் ரூ.13,999 க்கு விற்கப்பட்டது. 3 தளங்களிலும் இந்த போனை வாங்கலாம்.
இறுதியாக ரெட்மி Y2 தயாரிப்பின் 3ஜிபி மாடல் ரூ.7,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4 ஜிபி வகையைப் பொறுத்தவரை ரூ.9,999க்கு வாங்க முடியும். இந்த மாடலில் ரூ.1000 வரை விலை குறைந்துள்ள நிலையில் இந்த போனும் மூன்று தளங்களின் மூலமும் வாங்க முடியும்.
இதற்கிடையில் ஃபிளிப்கார்ட் தனியாக மாத இறுதி மொபைல் சேல் ஒன்றை நடத்த இருக்கின்றது. அதில் முக்கிய பிராண்டுகளான ஹானர், சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற தயாரிப்புகளின் மாடல்கள் தள்ளுபடி விலைக்கு விற்பனைக்குயாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
All India Rankers Now Streaming on Netflix: What You Need to Know
Andhra King Taluka OTT Release: When and Where to Watch Ram Pothineni’s Telugu Film