ரெட்மீ நோட் 7S விலை 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை ஆகஸ்ட் 18 வரை நீடிக்கும்
சியோமி இந்தியா தனது Mi சூப்பர் சேலை மீண்டும் அறிவித்துள்ளது. ஏற்கனவே துவங்கிய விற்பனை, ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனை பல ஸ்மார்ட்போன்களுக்கு 8,000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் Mi எக்ஸ்சேஞ்ச் உடன் 2,000 ரூபாய் தள்ளுபடி என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி சலுகை சியோமி Mi A2, ரெட்மி Y3 மற்றும் போகோ F1 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பொருந்தும். ரெட்மி நோட் 7 Pro, ரெட்மி நோட் 7S, ரெட்மி 7, ரெட்மி 7A, ரெட்மி 6, ரெட்மி 6 Pro போன்ற தொலைபேசிகள் தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் Mi.com இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த விற்பனையில் ரெட்மீ நோட் 7S மற்றும் ரெட்மீ நோட் 7 Pro ஆகியவை சலுகைகளை பெற்றுள்ளன. அதன்படி 3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S-ன் விலை 9,999 ரூபாய், மற்றும் ரூ. 4GB / 64GB வகையின் விலை 11,999 ரூபாய். அதாவது ரெட்மீ நோட் 7S விலை 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ரெட்மீ நோட் 7 Pro 4GB RAM + 64GB சேமிப்பு வகையின் விலை 13,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவிலும் கிடைக்கும், இதன் விலை 14,999 ரூபாய் மற்றும் இந்த வரிசையில் டாப்-மாடலான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகை இந்த விற்பனை காலத்தில் 16,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெரும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் Mi.com தளத்தில் கிடைக்கப்பெறும்.
ரெட்மீ Y3 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு மாடலுக்கு 8,999 ரூபாயும், 4GB RAM + 64GB சேமிப்பு வகைக்கு 10.999 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் போல்ட் ரெட், நேர்த்தியான நீலம் மற்றும் பிரைம் பிளாக் வண்ணகளில் வருகின்றன. ஸ்மார்ட்போனை Mi.com வழியாக வாங்கலாம்.
இந்த விற்பனையில், ரெட்மீ 7-ன் 2GB RAM / 32GB சேமிப்பு வகை 7,499 ரூபாய் என்ற விலையிலும், 3GB RAM / 32GB சேமிப்பு வகை 8,499 ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கப்பெறும். இது அமேசான் மற்றும் Mi.com தளங்களில் காமட் ப்ளூ, எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ரெட் ஆகிய வண்ணங்களில் விற்பனையாகும்.
மறுபுறம், ரெட்மி 7A-வின் 2GB RAM + 16GB சேமிப்பு வகை 5,999 ரூபாயிலும் 2GB RAM + 32GB சேமிப்பு வகை 6,199 ரூபாயிலும் விற்பனையாகவுள்ளது.
போகோ F1 ஸ்மார்ட்போனின் 6GB RAM + 64GB சேமிப்பு வகை 17,999 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM + 256GB சேமிப்பு வகை 22,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.
சியோமி Mi A2 4GB RAM + 64GB சேமிப்பு வகை 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனை. முன்னதாக இதன் கடைசி விலைக் குறைப்புக்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போன் 11.999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.
ரெட்மி 6 (3GB RAM + 64GB) 6,999 ரூபாய், ரெட்மி 6 Pro (4 GB RAM + 64 GB) 9,999 ரூபாய், மற்றும் ரெட்மி 6A (2GB RAM + 32GB) 5,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project
Ai+ Nova 2 Power Confirmed to Launch in India Soon; Teased to Feature 7,000mAh Battery, MediaTek Dimensity 7100 SoC