பயனர் அறிக்கையின்படி, Redmi Note 6 Pro இப்போது இந்தியாவில் MIUI 11 அப்டேட்டைப் பெறுகிறது. அப்டேட் புதிய optimised UI, Updated Mi File Manager, Floating Calculator, dynamic sounds மற்றும் பலவற்றைக் கொண்டுவருகிறது. இந்த புதிய அப்டேட்டின் பதிப்பு எண் MIUI 11.0.1.0.PEKMIXM, மற்றும் MIUI 11 அப்டேட்டின் அளவு 565MB ஆகும். Redmi Note 6 Pro என்பது ஜியோமியின் ரோல்அவுட் சாலை வரைபடத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். மூன்றாம் கட்டம் நவம்பர் 13 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அப்டேட் இப்போது ஒரு சில பயனர்களுக்கு வெளிவருகிறது.
Mi Forums இப்போது Redmi Note 6 Pro-வின் MIUI 11 அப்டேட் ஸ்கிரீன் ஷாட்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. பயனர்கள் அப்டேட்டைப் பெறுவதற்கான ஸ்கிரீன் ஷாட்களை பதிவிடுகிறார்கள். மேலும், சில பயனர்கள் மட்டுமே இப்போது அப்டேட்டைப் பெறுகிறார்கள். சோதனையை முடித்த பிறகு, ஜியோமி MIUI 11 அப்டேட்டை இன்னும் விரிவாக வெளியிடும். நீங்கள் ஒரு Redmi Note 6 Pro-வை வைத்திருந்தால், Settings > About phone > System update -க்குச் சென்று உங்கள் போனில் MIUI 11 அப்டேட் கிடைப்பதை சரிபார்க்கலாம். ஜியோமியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை அல்லது இதுவரை எந்த பதிவிறக்க இணைப்பும் கிடைக்கவில்லை. உறுதிப்படுத்த நாங்கள் ஜியோமியை அணுகினோம். மேலும் அப்டேட் உண்மையாகவே வெளிவருவதாகக் கூறப்பட்டது.
புதிய MIUI 11 அம்சங்களில் புதிய minimalistic design, புதிய dynamic sound effects, புதிய Mi File Manager app, Steps Tracker, Wallpaper Carousel மற்றும் Floating Calculator ஆகியவை அடங்கும். குறிப்பிட்டுள்ளபடி, MIUI 11 அப்டேட் அக்டோபர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் (October 2019 Android security patch) கொண்டு வருகிறது. மேலும், அனைத்து பயனர்களும் அப்டேட்டைப் பெற்றவுடன் அதை பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கிறோம்.
மூன்றாவது தொகுப்பிலிருந்து, Redmi 8 மற்றும் Redmi 8A பயனர்களும் அப்டேட்டைப் பெறத் தொடங்கியுள்ளனர். Redmi 7A மற்றும் Redmi Note 8 பயனர்கள் இப்போது மூன்றாவது தொகுப்பில் MIUI 11 அப்டேட்டைப் பெற உள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்