இந்தியாவில் Redmi K20 Pro ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக திருத்தியுள்ளதாக ஜியோமி வியாழக்கிழமை (இன்று) அறிவித்தது. குறிப்பிடத்தக்க வகையில், இது போனின் புதிய விலை நிர்ணயம் அல்ல, ஏனெனில் நிறுவனம் தொடர்ந்து போனின் 6GB மற்றும் 8GB RAM வேரியண்டுகளை டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து, திருத்தப்பட்ட விலை நிர்ணயம் என்று அழைக்கப்படுகிறது. பல மடங்கு அதன் 'almost always running' Mi Super Sale மற்றும் அது இல்லாமல் கூட. இன்றைய அறிவிப்பு, பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு போன்கள் தங்களது கடைசி அதிகாரப்பூர்வ விலையை விட குறைவாகவே கிடைக்கின்றன என்பதை நினைவூட்டுவதாகும்.
ஜியோமி இந்தியாவின் முதல்வர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் இந்த வளர்ச்சியை அறிவித்தார். Redmi K20 Pro இன்று விலை குறைப்பு அறிவிப்பைக் காணும் இரண்டாவது போன் ஆகும். முன்னதாக, இந்தியாவில் Mi A3 விலையை குறைத்துள்ளதாகவும், அந்த போன் இப்போது ரூ. 11.999-க்கு கிடைக்கிறது.
Redmi K20 Pro-வின் அடிப்படை 6GB + 64GB மாடலின் விலை இப்போது ரூ. 24,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஸமார்ட்போனின் top-end 8GB + 256GB மாடலை ரூ. 27,999-க்கு வாங்கலாம். ஜியோமி, Redmi K20 Pro-வை mi.com, Flipkart, Amazon, Mi Home stores மற்றும் ஜியோமியின் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்ஸ் வழியாக விற்பனை செய்கிறது. இந்த போனை Carbon Black, Flame Blue, Glacier Blue மற்றும் Pearl White ஆகியவற்றில் வாங்கலாம்.
டூயல்-சிம் (நானோ) Redmi K20 Pro, MIUI 10 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இந்த போன் ஏற்கனவே நாட்டில் MIUI 11 அப்டேட்டை பெற்றுள்ளது. விரைவில் Android 10-ஐப் பெற வேண்டும். இந்த போன் 19.5:9 aspect ratio உடன் 6.39-inch AMOLED full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவுடன் வருகிறது. இது, 8GB RAM மற்றும் 256GB வரை இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது.
Redmi K20 Pro-வில் f/1.75 lens உடன் 48-megapixel Sony IMX586 முதன்மை இமேஜ் சென்சார், wide-angle lens உடன் 13-megapixel இரண்டாம் நிலை ஷூட்டர் மற்றும் f/2.4 lens உடன் 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் அடங்கிய டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. ஆன்போர்டில் 20-megapixel pop-up செல்ஃபி கேமரா உள்ளது.
Redmi K20 Pro-வின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C port மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்