ரெட்மி 6,6ஏ,6ப்ரோ பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்தது ஜியோமி

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ரெட்மி 6,6ஏ,6ப்ரோ பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்தது ஜியோமி
விளம்பரம்

ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்தது ஜியோமி நிறுவனம். ரெட்மி 6ஏ, 6, 6 ப்ரோ என மூன்று மாடல்களில் பட்ஜெட் ஃபோன்களாக அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோமி. மூன்று மொபைல்களில் ரெட்மி 6ஏ குறைந்த விலை கொண்டது. நாட்ச் டிஸ்பிளே கொண்ட 6 ப்ரோ ஹை எண்ட் மொபைலாக இருக்கிறது. 

டூயல் வோல்ட் சிம் ஸ்லாட், ஃபேஸ் அன்லாக், எம்.ஐ.யூ.ஐ, மெமரி கார்டுக்கு தனி ஸ்லாட், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுக்கான சப்போர்ட் ஆகியவை இந்த மூன்று மொபைல்களிலும் பொதுவாக உள்ள அம்சங்கள். 


இந்தியாவில் விலை:

3ஜி.பி ரேம்/ 32ஜி.பி மெமரி கொண்ட ரெட்மி 6 வேரியன்டின் விலை 7,999 ரூபாய். 3ஜி.பி ரேம்/ 64ஜி.பி வேரியன்டின் விலை 9,499 ரூபாய்என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் ரெட்மி இணையதளத்தில் செப்டம்பர் 10-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. 

2ஜி.பி ரேம்/ 16ஜி.பி மெமரி கொண்ட ரெட்மி 6ஏ வேரியன்டின் விலை 5,999 ரூபாய். 2ஜி.பி ரேம்/ 32ஜி.பி வேரியன்டின் விலை 6,499 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி அமேசான் மற்றும் ரெட்மி இணையதளத்தில் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது.

3ஜி.பி ரேம்/ 32ஜி.பி மெமரி கொண்ட ரெட்மி 6 ப்ரோ வேரியன்டின் விலை 10,999 ரூபாய். 4ஜி.பி ரேம்/ 64ஜி.பி வேரியன்டின் விலை 12,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி அமேசான் மற்றும் ரெட்மி இணையதளத்தில் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது. 

ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம். ரெட்மி 6 அல்லது 6 ப்ரோ மொபைல்களை வாங்கினால் 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
 

Xiaomi Redmi 6 Price in India Xiaomi Redmi 6 price in India

ரெட்மி 6 ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்: 

இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி+, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ தொடு திரை கொண்டது. குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ பிராசர் கொண்டது. 3ஜிபி/4ஜிபி ரேமும் இதில் இருக்கிறது. 32/64 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். எஸ்.டி கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. 

பின் பக்கத்தில், 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சாரும், 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரும் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. முன் பக்கத்தில் 5 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது. 

நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3000mAh பேட்டரி கொண்டது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கைரோஸ்கோப், இன்ஃப்ராரெட், ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை146 கிராம். கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் நீல நிறங்களில் வருகிறது ரெட்மி 6.

ரெட்மி 6ஏ ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்: 

இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி+, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ தொடு திரை கொண்டது. குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ பிராசர் கொண்டது. 2ஜிபி ரேமும் இதில் இருக்கிறது. 16/32 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். எஸ்.டி கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. 

பின் பக்கத்தில், 13 மெகா பிக்சல் கேமரா சென்சாரும், முன் பக்கத்தில் 5 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது. 

நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3000mAh பேட்டரி கொண்டது. ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை145 கிராம். கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் நீல நிறங்களில் வருகிறது ரெட்மி 6ஏ.

ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்: 

இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.84 இன்ச் முழு ஹெச்.டி+, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவில் நாட்ச் டிஸ்பிளே கொண்டது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 620சி பிராசரும் கொண்டது. 3ஜிபி/4ஜிபி ரேமும் இதில் இருக்கிறது. 32/64 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். எஸ்.டி கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. 

பின் பக்கத்தில், 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சாரும், 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரும் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. பின்புற எல்.இ.டி ஃபிளாஷும் உண்டு. முன் பக்கத்தில் 5 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது. 

நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 4000mAh பேட்டரி கொண்டது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கைரோஸ்கோப், இன்ஃப்ராரெட், ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை178 கிராம். கருப்பு, கோல்டு, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வருகிறது ரெட்மி 6ப்ரோ.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Below average low-light camera performance
  • Bloated UI, spammy notifications
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good-looking and easy to handle
  • Excellent battery life
  • Reasonable performance for the price
  • Bad
  • Too much bloat and too many ads
  • Price will rise after introductory offer
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Dedicated microSD card slot
  • Vivid display
  • Very good battery life
  • Bad
  • No dual 4G VoLTE
  • Unattractive notch design
  • Weak low-light camera performance
  • App scaling is affected by the notch
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »