இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி 5ஏ ஃப்ளாஷ்!

பிளிப்கார்ட், mi.com ஆகிய தளங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கும்

இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி 5ஏ ஃப்ளாஷ்!
ஹைலைட்ஸ்
  • ரெட்மி 5A இந்தியாவில் 5999 ரூபாய் முதல் கிடைக்கிறது
  • ஃப்ளாஷ் சேல் இன்று மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது
  • flipkart மற்றும் mi.com தளங்களில் விற்பனை
விளம்பரம்

ரெட்மி 5A ஸ்மார் போன், ஃப்ளாஷ் விற்பனை, அந்திறுவனத்தின் வாராந்திர விற்பனை அட்டவணைப்படி இன்று மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது. 16 ஜிபி இன்டர்னல் மெமரி-2ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி - 3ஜிபி ரேம் ஆகிய இரண்டு வகையான 5ஏ போன்கள் கிடைக்கின்றன. இவை முறையே 5999 ரூபாய் மற்றும் 6999 ரூபாய்க்கு கிடைக்கின்றன. அந்த வகையில் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன் மாடலாக இது விளங்குகிறது.

நீலம், தங்க நிற மஞ்சள், சாம்பல், ரோஸ் கோல்ட் ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கும்.

பிளிப்கார்ட், mi.com ஆகிய தளங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கும். சியோமி நிறுவனத்தின் தளமான Mi.com வழியாக வாங்குவோர்க்கு மூன்று மாத ஹங்காமா இசைச் சந்தாவும், ஜியோவின் 2200 ரூபாய்க்கான கேஷ்பேக்கும் கிடைக்கும். பிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் வங்கி பஸ் கார்டுகள் மூலம் வாங்குவோர்க்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.

ரெட்மி 5ஏ ஐந்து அங்குல (720*1280) திரையைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு நூகட், MIUI 9 ஆகியவற்றில் இயங்குவதோடு விரைவில் MIUI 10 அப்டேட் வர இருக்கிறது.

க்வால்காம் 425 SoC ப்ராஸசர் கொண்டுள்ளது.

ரியர் சென்சார், f/2.2 அப்பர்ச்சர் எல்ஈடி ஃப்ளாஷ், பிடிஏப் உடன் கூடிய 13 மெகா பிக்சல் பின்பக்க கேமரா. முன்பக்கத்தில் f/2.0 அப்பர்ச்சருடன் கூடிய 5 மெகா பிக்சல் கேமரா. எட்டு நாட்கள் வரை நீடிக்கக் கூடிய 3000mAh பேட்டரி.

4G Volte, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்/ A-GPS, இன்பிராரெட், மைக்ரோ USB, 3.5 மிமீ ஜாக் ஆகிய கனக்டிவிட்டி ஆப்சன்களையும் உள்ளடக்கியுள்ளது. ப்ராக்சிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்சலரோமீட்டர் ஆகிய அம்சங்களையும் ரெட்மி 5A கொண்டுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Good performance
  • Great battery life
  • Bad
  • Weak cameras
  • Nothing new compared to the Redmi 4A
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android 7.1.2
Resolution 720x1280 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »