இந்தியாவில் Realme 5i நாளை முதல் விற்பனைக்கு செல்ல உள்ளது. Realme 5-ன் அடிப்படை வேரியண்டாக கடந்த வாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் Realme online store மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். சீன நிறுவனம் வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதற்காக பலவிதமான விற்பனை சலுகைகளை கொண்டு வரும்.
இந்தியாவில் Realme 5i-யின் ஒரே 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 8,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Aqua Blue மற்றும் Forest Green கலர் ஆப்ஷன்களில், நாளை மதியம் 12 மணி முதல் Flipkart மற்றும் Realme online store மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.
Realme 5i-யின் விற்பனை சலுகைகளில், ஜியோ பயனர்களுக்கு ரூ. 7,550 மதிப்புள்ள பலன்கள் அடங்கும். பிளிப்கார்ட் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு இந்த பலன்கள் கிடைக்கும். Realme ஆன்லைன் ஸ்டோர் மூலம் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு MobiKwik வழியாக ரூ. 1000 வரை 10 சதவீத SuperCash பெற உரிமை உண்டு. மேலும், ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் மூலம் பழைய ஸ்மார்ட்போனைப் பரிமாறும்போது கூடுதலாக ரூ. 500 கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் Cashify வழியாக வழங்கப்படுகிறது.
டூயல்-சிம் (நானோ) Realme 5i, ColorOS 6.0.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio மற்றும் 269ppi of pixel density உடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) in-cell டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பேனல் 2.5D curved Corning Gorilla Glass 3 protection-ஆல் பாதுகாக்கப்படுகிறது. ஹூட்டின் கீழ், இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Realme 5i-யின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 aperture உடன் 12-megapixel கேமராவை பேக் செய்கிறது. மேலும், f/2.25 lens உடன் 8-megapixel wide-angle கேமரா மற்றும் 118.9-degree viewing angle, a 2-megapixel portrait கேமரா மற்றும் 4cm close-up range உடன் 2-megapixel macro ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில், LED flash-ம் உள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் f/2.0 aperture உடன் 8-megapixel கேமரா உள்ளது. கேமரா அமைப்பில் 4K video capture at 30fps, slo-mo video recording at 120fps மற்றும் super night mode ஆகியவை அடங்கும். மேலும், Beauty, HDR, Portrait, Timelapse, Slo-mo, NightScape 2.0 மற்றும் Expert ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட்போன் பட்டியலிடப்படுள்ளது.
Realme 5i, 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவுபடுத்தலாம். இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11ac மற்றும் GPS ஆகியவை அடங்கும். Realme 5i-யில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, gyroscope, proximity சென்சார் ஆகியவை அடங்கும். மேலும், அங்கிகாரத்திற்காக rear-mounted fingerprint சென்சாரும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது. தவிர, இந்த போன் 164.4x75x9.3mm அளவீடையும், 195 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்