சீன பிராண்டின் மிகவும் மலிவு போன்களில் ஒன்றான Realme 5i, இந்தியாவில் புதிய வேரியண்டை பெற்றுள்ளது. புதிய வேரியண்ட் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. Realme 5i இந்தியாவில் ஜனவரி மாதம் ஒரே, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Realme 5i-யின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.8,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை விட ரூ.1,000 அதிகம். Realme 5i-யின் இரண்டு வேரியண்டுகளும் Flipkart மற்றும் Realme.com வலைத்தளம் மூலம் வாங்குவதற்கு கிடைக்கின்றன. மேலும், இந்த போன் Aqua Blue மற்றும் Forest Green கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
டூயல்-சிம் (நானோ) Realme 5i, கலர்ஓஎஸ் 6.0.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது மற்றும் 20:9 விகிதத்துடன் 6.52 இன்ச் எச்டி + (720x1600 பிக்சல்கள்) இன்-செல் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போனில் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 665 SoC உள்ளது, இது 4 ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Realme 5i-யின் குவாட் ரியர் கேமரா அமைப்பு f/1.8 லென்ஸுடன்12 மெகாபிக்சல் முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. இது வைட்-ஆங்கிள் f/2.25 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, f/2.4 போரெயிட் மற்றும் மேக்ரோ லென்ஸுடன் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் f/2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.
Realme 5i vs Redmi Note 8: Which of These Popular Smartphones Should You Buy?
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்புகளை ரியல்மி வழங்கியுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. தவிர, இது 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.
Realme 5 or Redmi Note 8: Which one should you buy? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்