முதல் விற்பனையை சந்திக்கும் Realme 5, விலை, சிறப்பம்சங்கள் என்ன?

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 27 ஆகஸ்ட் 2019 12:10 IST
ஹைலைட்ஸ்
  • 4GB RAM/ 128GB சேமிப்பு Realme 5 ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய்க்கு அறிமுகம்
  • இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.
  • ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4 அன்று விற்பனைக்கு வரவுள்ளது

இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Crystal Blue) மற்றும் ஊதா (Crystal Purple) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

கடந்த வாரம் அறிமுகமான ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், முதல் முறையாக இந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ரியல்மீ மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ரட்போனுடன் அறிமுகமான ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், நான்கு கேமராக்களுடன் , 9,999 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ள ஒரு குறைந்த விலை பட்ஜெட் ஸ்மார்ட்போன். 6.5-இன்ச் full-HD+ திரை, 5,000mAh அளவிலான பேட்டரி, ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர், 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா ஆகிய சிறப்பம்சங்களை இந்த ரியல்மீ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ரியல்மீ 5: விலை மற்றும் விற்பனை!

மறுபுறம் ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது.  3GB RAM/ 32GB சேமிப்பு வகை 9,999 ரூபாயிலும், 4GB RAM/ 64GB சேமிப்பு வகை 10,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM/ 128GB சேமிப்பு வகை 11,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Crystal Blue) மற்றும் ஊதா (Crystal Purple) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27-ஆன இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. 

ரியல்மீ 5: சிறப்பம்சங்கள்!

இந்த ஸ்மார்ட்போனும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் போன்றே இரண்டு நானோ சிம் வசதி கொண்ட Color OS 6.0-யை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் full-HD+ (720x1600 பிக்சல்கள்) திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது. 

4 பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 119-டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான போர்ட்ரைட் கேமரா ஆகிய கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் அளவிலான வாட்டர்-ட்ராப் நாட்ச் கேமராவை கொண்டுள்ளது.

ரியல்மீ 5 Pro ஸ்மர்ர்ட்போன் 4G VoLTE, வை-பை 802.11ac, ப்ளூடூத் v5.0, a GPS/ A-GPS, 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் USB டைப்-C சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும், இதனுடன் VOOC 3.0 அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Useful additional cameras
  • Efficient processor
  • Bad
  • No fast charging
  • Weak low-light camera performance
  • Slightly heavy
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 5, Realme 5 Price in India, Realme 5 specifications, Realme 5 Pro, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Fab Grab Fest 2025: Galaxy S25, Galaxy Z Fold7 முதல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை - அதிரடி சலுகை
  2. Amazon-ல் Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! iPad, Samsung, OnePlus டேப்லெட்டுகளுக்கு அதிரடி சலுகைகள்
  3. Amazon Great Indian Festival 2025: Samsung, Xiaomi, LG ஸ்மார்ட் டிவி-களுக்கு அதிரடி விலைக் குறைப்பு
  4. Amazon vs Flipkart: Samsung Galaxy S24 Ultra மற்றும் iPhone 16 Pro-வுக்கு மிகப்பெரிய விலைக் குறைப்பு! எது வாங்கலாம்?
  5. Vivo X300 series போன் வெளியீட்டு தேதி உறுதியாகிடுச்சு! ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. Samsung ஃபோன் வாங்கலாமா? Amazon Great Indian Festival Sale 2025-ல Galaxy S24 Ultra, Z Fold 6 உட்பட பல போன்களுக்கு செம Discounts
  7. OnePlus ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க!
  8. Redmi மற்றும் Xiaomi ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க
  9. வீட்டையே தியேட்டரா மாத்தணுமா? Amazon Sale-ல Lumio Vision-ன் Smart TVs மற்றும் Projectors-க்கு செம Discounts இருக்கு!
  10. Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! Amazon Great Indian Festival Sale 2025-ல் Apple முதல் Samsung வரைSpecial Discounts
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.