பிழை திருத்தங்களுடன் ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ்டிக்கு மே மாதத்திற்கான ஓடிஏ அப்டேட்டை ரியல்மி கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் ரியல்மி 5 ப்ரோ ஏப்ரல் பாதுகாப்பு பேட்ச் மற்றும் டோக்வால்ட் ஐடி அம்சத்தை பெறுகிறது
ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ்டி ஆகியவை மே மாதத்திற்கான OTA மென்பொருள் அப்டேட்டுகளை பெறத் தொடங்கியுள்ளன. இந்த அப்டேட் ஏப்ரல் பாதுகாப்புப் பேட்சுடன் வருகிறது.
Realme 5 Pro-க்கான அப்டேட் உருவாக்க எண் RMX1971EX_11.C.03 ஆகும். அதே சமயம் ரியல்மி எக்ஸ்டிக்கான அப்டேட் உருவாக்க எண் RMX1921EX_11.C.04 ஆகும். இரண்டு போன்களின் இந்த சமீபத்திய அப்டேட் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, இந்த அப்டேட் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்காக வெளியிடப்பட்டது. மேலும், இந்த அப்டேட்டில் தீவிரமான பிழை எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, இந்த அப்டேட் எதிர் வரும் சில நாட்களில் ஒவ்வொரு பயனருக்கும் வெளியிடப்படும்.
ரியல்மி தனது சமூக இணையதளத்தில் இந்த சமீபத்திய OTA அப்டேட்டை வழங்கியது. ரியல்மி 5 ப்ரோவின் அப்டேட் எண் உருவாக்க எண் RMX1971EX_11.C.03. இது ஏப்ரல் 2020 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சுடன் வந்தது. இந்த அப்டேட்டின் மூலம், இந்திய பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டாக்வால்ட் ஐடி (DocVault ID) அம்சத்தைப் பெறுவார்கள். இது தவிர, மூன்றாம் தரப்பு செயலியின் ஆடியோ தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
டார்க் மோடில் சமீபத்திய இருப்பிட தகவல்களின் பட்டியலின் வலதுபுறத்திலும் அம்பு (arrow) சேர்க்கப்பட்டுள்ளது. ரியல்மி போனில் மியூசிக் கேட்கும் போதெல்லாம், உடனடி டோனை முடக்குவது போன்ற சில திருத்தங்களும் இந்த அப்டேட்டில் அடங்கும். பின்னணி பணியை நீக்குவது, போனின் அலாரம் அணைக்கப்படுவதையும் கவனித்துள்ளது.
Realme XT அப்டேட்டின் ஃபார்ம்வேர் பதிப்பு RMX1921EX_11.C.04 ஆகும். இது சமீபத்திய ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. இந்த அப்டேட்டுடன், ரியல்மி 5 ப்ரோவில் உள்ள அனைத்து மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உங்கள் போனில் Settings > Software Upgrade-க்குச் சென்று அப்டேட்டை சரிபார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Exynos 2600 Details Leak Ahead of Galaxy S26 Launch; Could Be Equipped With 10-Core CPU, AMD GPU
Vivo Y50e 5G, Vivo Y50s 5G Appear on Google Play Console; Mysterious Vivo Phone Listed on Certification Site