Realme X-ன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு குறைக்கப்பட்ட விலையில் ரூ.14,999-யாகவும், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.17,999-யாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
                ரியல்மி எக்ஸ் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது
ரியல்மி, ரியல்மி எக்ஸ்ட்ரா டேஸ் விற்பனையை நடத்துகிறது, அதில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பல போன்களில் விலைக் குறைப்புகளை வழங்குகிறது. இந்த விற்பனை பிப்ரவரி 29-ஆம் தேதியுடன் முடிவடையும். மேலும், ரியல்மி எக்ஸ், ரியல்மி எக்ஸ்டி மற்றும் ரியல்மி 5 ப்ரோவில் விலைக் குறைப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ரியல்மி எக்ஸ் ரூ.2,000 விலைக் குறைப்பையும், ரியல்மி எக்ஸ்டி போனின் விலையில் ரூ.1,000-மும் குறைக்கப்பட்டடுள்ளது. ரியல்மி 5 புரோ 4 ஜிபி மாடலும் ரூ.11.999-க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் தனது ட்விட்டர் பதிவின் மூலம் விற்பனை அறிவிப்பை வெளியிட்டார். Realme X-ன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு குறைக்கப்பட்ட விலையில் ரூ.14,999-யாகவும், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.17,999-யாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் பொருள் விற்பனை காலத்திற்கான இரண்டு ஸ்டோரேஜ்களிலும் ரூ.2,000 விலைக் குறைப்பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய விலைகள் Realme.com, Amazon India மற்றும் Flipkart ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. இந்த போன் Polar White மற்றும் Space Blue கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
மேலும், no-cost EMI ஆப்ஷன்கள், காஷிஃபை எக்ஸ்சேஞில் ரூ.500 கூடுதல் தள்ளுபடி மற்றும் மொபிக்விக் வழியாக ரூ.500 வரை கேஷ்பேக் ஆகியவற்றை ரியல்மி.காம் வழங்குகிறது. வங்கி தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழங்குகின்றன.
ரியல்மி எக்ஸ்டியின் அனைத்து வேரியண்டுகளிலும் விலை குறைப்பு உள்ளது. Realme XT-யின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஆப்ஷன் ரூ.14,999-யாகவும், அதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.15,999-யாகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுக்கு ரூ.17,999-யாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் பொருள் Realme.com, Amazon India மற்றும் Flipkart ஆகியவற்றில் ரியல்மி எக்ஸ்டியின் அனைத்து வேரியண்டுகளிலும் ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போன் Pearl Blue மற்றும் Pearl White கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேலும், ரியல்மி எக்ஸ் போன்ற அதே சலுகைகள் ரியல்மி எக்ஸ்டிக்கும் அனைத்து தளங்களிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.
எக்ஸ்ட்ரா டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக, நிறுவனம் Realme 5 Pro-வை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் கடைசி விலைக் குறைப்பான ரூ.12,999-க்கு (last cut price of Rs. 12,999) பதிலாக தற்போது ரூ.11,999-க்கு விற்பனை செய்கிறது. இதன் பொருள் விற்பனை சலுகையின் ஒரு பகுதியாக கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது, மேலும் இந்த மாடல்களில் கூடுதல் விலைக் குறைப்பு எதுவும் இல்லை. இந்த வேரியண்டுகள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999-க்கு சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. 4 ஜிபி ரேம் ஆப்ஷ்னனுக்கான புதிய விலை Realme.com, Amazon India மற்றும் Flipkart ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. இந்த போன் Sparkling Blue மற்றும் Crystal Green கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மேலும், மொபிக்விக் கேஷ்பேக் மற்றும் காஷிஃபை எக்ஸ்சேஞ் பலன்கலை மட்டுமே ரியல்மி.காம் வாங்குகிறது. வங்கி தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களை அமேசான் வழங்குகிறது, அதே நேரத்தில் வங்கி தள்ளுபடியை மட்டுமே பிளிப்கார்ட் வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                            
                                Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                        
                     Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                            
                                Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                        
                     OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                            
                                OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                        
                     Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                            
                                Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak