ரியல்மீ 5 ஸ்மார்ட்போனின் 3GB RAM/ 32GB சேமிப்பு வகை 9,999 ரூபாய் விலையில் விற்பனையாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Crystal Blue) மற்றும் ஊதா (Crystal Purple) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
கடந்த வாரம் அறிமுகமான ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், முதல் முறையாக இந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ரியல்மீ மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ரட்போனுடன் அறிமுகமான ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், நான்கு கேமராக்களுடன் , 9,999 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ள ஒரு குறைந்த விலை பட்ஜெட் ஸ்மார்ட்போன். 6.5-இன்ச் full-HD+ திரை, 5,000mAh அளவிலான பேட்டரி, ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர், 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா ஆகிய சிறப்பம்சங்களை இந்த ரியல்மீ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
மறுபுறம் ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM/ 32GB சேமிப்பு வகை 9,999 ரூபாயிலும், 4GB RAM/ 64GB சேமிப்பு வகை 10,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM/ 128GB சேமிப்பு வகை 11,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Crystal Blue) மற்றும் ஊதா (Crystal Purple) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27-ஆன இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் போன்றே இரண்டு நானோ சிம் வசதி கொண்ட Color OS 6.0-யை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் full-HD+ (720x1600 பிக்சல்கள்) திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது.
4 பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 119-டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான போர்ட்ரைட் கேமரா ஆகிய கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் அளவிலான வாட்டர்-ட்ராப் நாட்ச் கேமராவை கொண்டுள்ளது.
ரியல்மீ 5 Pro ஸ்மர்ர்ட்போன் 4G VoLTE, வை-பை 802.11ac, ப்ளூடூத் v5.0, a GPS/ A-GPS, 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் USB டைப்-C சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும், இதனுடன் VOOC 3.0 அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces