ரியல்மீ 3 ப்ரோவின் அட்டகாச சிறப்பம்சங்கள்… பரபர தகவல்கள்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 13 ஏப்ரல் 2019 17:06 IST
ஹைலைட்ஸ்
  • கீக்பென்ச் தளத்தில் ரியல்மீ 3 ப்ரோ குறித்து தகவல் கசிந்துள்ளது
  • ரியல்மீ 3 ப்ரோ, வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
  • ஃபோர்ட்நைட் கேமிற்கான சப்போர்ட் உடன் வரும் இந்த போன்

5GHz வை-ஃபை இணைப்பு ப்ளூடூத், ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கக்கூடும். 

ரியல்மீ 3 ப்ரோ, வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனால், அதற்கு முன்னரே அந்த போன் குறித்து சில பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கீக்பென்ச் தளத்தில் வெளியான தகவல்படி, ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி-யை ரியல்மீ 3 ப்ரோ பெற்றிருக்கலாம் எனப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9.0 பைய் மூலம் இந்த போன் இயங்குகிறதாம். ஃபோர்ட்நைட் கேமிற்கான சப்போர்ட் உடன் வரும் இந்த போன், சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோவிற்கு போட்டியாக சந்தையில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

6ஜிபி ரேமுடன் இந்த போன் இயங்கும் என கீக்பென்ச் தளம் கூறுகின்றது. மேலும் போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே மற்றும் 3,960 எம்.ஏ.எச் பேட்டரி வசதியுடன் ரியல்மீ 3 ப்ரோ சந்தைக்கு வரலாம். 5GHz வை-ஃபை இணைப்பு ப்ளூடூத், ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கக்கூடும். 

இந்த போன் கேமிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், ‘ஃபோர்ட்நைட்' கேமிற்கு சப்போர்ட் கொடுக்கும் முதல் போன் இதுவாக இருக்கும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேத் தனது ட்வீட்டில், ரெட்மி நோட் 7 ப்ரோ குறித்தும் கேலி செய்யும் வகையில், ‘சமீபத்தில் வெளியான ‘ப்ரோ' போனில் வீடியோ கேம் விளையாட முயன்று அலுத்துப் போய்விட்டீர்களா. வேகம் என்று வரும்போது, நாங்கள்தான் கெத்து' என்று பதிவிட்டுள்ளார். 

ரியல்மீ 3 ப்ரோ-வின் சிறப்பம்சமான ‘சிப்செட்' குறித்து இதுவரை எந்தவித தகவலும் கசியவில்லை. ஆனால், போனில் 48 மெகா பிக்சல் திறன் கொண்ட முதன்மை சென்சார் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஷேத் சமீபத்தில் ட்வீட்டியதில், மூன்று கேமரா வகைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில் ஒரு கேமரா, ரியல்மீ 3 ப்ரோ-வில் வரும் செல்ஃபியும், மற்ற இரண்டு பின்புற கேமரா சாம்பிளாக இருக்கும் எனப்படுகிறது. செல்ஃபி கேமராவின் திறன் 13 மெகா பிக்சலை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மீ 3 ப்ரோ-வின் விலை குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை என்றபோதும் ரெட்மி நோட் 7 ப்ரோவின் விலையை ஒத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 7 ப்ரோ, 13,999 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful and efficient SoC
  • Very good battery life
  • Cameras fare well under good light
  • Bundled fast charger
  • Bad
  • Average low-light camera performance
  • Laminated back scuffs easily
  • No USB Type-C port
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4045mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 3 Pro specifications, Realme 3 Pro, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  2. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  3. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  4. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
  5. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  6. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  7. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  8. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  9. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  10. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.