The Realme 3’s arrival has also been confirmed by the company’s CEO.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான அறிவிப்பின் படி ரியல்மி 3 இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அதிகாரபூர்வமான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விற்பனைக்கு வரும் ரியல்மி1 மற்றும் ரியல்மி2 பெட்டிகளின் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளன. இந்த அதிகார்வபூர்வ அறிவிப்பின் படி ரியல்மி 3 பற்றிய தகவல் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இப்படி தகவல்கள் பலவும் கசிந்து வரும் நிலையில், இந்த புதிய போனின் டிசைன், அமைப்புகள் மற்றும் சிறப்பு தன்மை போன்றவையின் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ரியல்மி நிர்வாக இயக்குனர் மாதவ் சேத் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி ரியல்மி இந்த ஆண்டு முதல் பாதிக்குள் வெளியாகும் என அறிவித்தார்.
மேலும் அந்நிறுவனம் 48 மெகா பிக்சல் கேமரா தொழிநுட்பத்தை இணைப்பதிலும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. இப்படி பலர் சார்பில் கருத்துக்கள் பலவும் வரும் நிலையில், போனின் பாகங்கள் மற்றும் அமைப்பை பற்றிய தகவல் இன்னும் அறியபடவில்லை என்பது கூடுதல் தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்