ரிலீசுக்கு முன்னர் கசிந்த முக்கிய தகவல்கள்!
பட்ஜெட் போன்களிடையே மிகவும் பிரபலமான ரியல்மி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் போன்களை தந்துகொண்டிருந்தது. ரியல்மி குழுமம் தயாரித்த போன்களிலேயே அதிகப்படியான வரவேற்பை பெற்ற ரியல்மி 2 ஸ்மார்ட்போனுக்கு பிறகு இந்த புதிய போனை பற்றிய தகவல் கசிந்துள்ளது.
மேலும் அந்நிறுவனம் சார்பாக வெளியான தகவல் படி, இந்த புதிய ரியல்மி3 ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 4 அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போனும் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
Exclusive: Here's your first look at the front of Realme's upcoming smartphone, the Realme 3 showing us the amazing benchmark score of the Helio P70 Chipset. The Phone seems to have a Dewdrop Notch and Android Pie (ColorOS 6.0 I guess!). Thoughts? #Realme3 #Realme #PowerYourStyle pic.twitter.com/xffgYkJFpZ
— Ishan Agarwal (@ishanagarwal24) February 25, 2019
இதைபற்றிய தகவல்களுடன் புகைப்படம் டிவிட்டரில் கசிந்துள்ள நிலையில் ரியல்மி3 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் வகை டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டிராய்டு 9 பைய் உடன் இந்த ஸ்மார்ட்போன் வரவுள்ள நிலையில் இது RMX1825 மாடலை சேர்ந்தது என்றும் இந்த போன் மீடியா டெக் ஹூலியோ பி70 பிராசஸ்சர் மற்றும் கலர் மென்பொருளாளை கொண்டு இயங்குவதாக தகவல் வந்துள்ளது.
டீசரை பொருத்தவரை இரண்டு பின்புற கேமரா உள்ளதாகவும், அதில் ஒன்று 48 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped