இந்தியாவில், கோவிட்-19-ன் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு நடந்து வருகிறது. இது ஆன்லைன் ஷாப்பிங்கில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்கிறது. தேவைப்படும் போது மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த ஊரடங்கு காரணமாக, பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஊரடங்கு முடிந்தவுடன், நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பல உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது அவை இந்தியாவில் அறிமுகப்படுத்த காத்திருக்கின்றன. விரைவில் வெளியாகவுள்ள 13 ஸ்மார்ட்போன்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
ரெட்மி நோட் சீரிஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமான சீரிஸாகும். ஏனெனில் இந்த மாடல்கள் குறைந்த விலையில் நல்ல அம்சங்களுடன் வருகின்றன. ஷாவ்மி நாட்டில் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனைக்கு முன்பே நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
Redmi Note 9 Pro Max புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மற்றும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 5,020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸின் விலை ரூ.14,999-யில் இருந்து தொடங்கும் என்று ஷாவ்மி அறிவித்துள்ளது.
மலிவான ஐபோனை யார்தான் விரும்ப மாட்டார்கள்? Apple ஐபோன் எஸ்இ (2020) நிறுவனத்தின் புதிய மலிவு ஐபோன் ஆகும். இது உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் ரூ.42,500-யில் இருந்து தொடங்குகிறது.
ஆப்பிள் iPhone SE (2020)-யின் விற்பனை தற்போது அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஊரடங்கு முடிந்த பிறகு இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஐபோன் எஸ்இ (2020)-யின் வடிவமைப்பு iPhone 8-ஐப் போன்றது. இது டிஸ்ப்ளேவின் மேலே மற்றும் கீழே பெரிய பெசல்களைக் கொண்டுள்ளது. இது ஃபேஸ்ஐடி மற்றும் வேறு சில சமீபத்திய அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. சாதனத்தில் சேர்க்கப்பட்டுள்ள வன்பொருள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது ஆப்பிள் ஏ 13 பயோனிக் செயலி பொருத்தப்பட்டுள்ளது.
OnePlus 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விலை இந்தியாவில் அறிவிக்கப்பட்டது. இந்தத் சீரிஸில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 புரோ உள்ளிட்ட இரண்டு மாடல்கள் உள்ளன. இந்தியாவில் ஒன்பிளஸ் 8-ன் ஆரம்ப விலை ரூ.41,999, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆரம்ப விலை ரூ.54,999-யாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 8 சீரிஸின் இரண்டு போன்கலும் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8 மற்றும் OnePlus 8 Pro குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டில் வேலை செய்கின்றன மற்றும் 5 ஜி இணைப்பை ஆதரிக்கின்றன. OnePlus 8 டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. அதே நேரத்தில், ஒன்பிளஸ் 8 ப்ரோ ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பை உள்ளடக்கியது. ஒன்பிளஸ் போன்கள் ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஸில் இயங்குகின்றன.
புதிய Motorola Razr 2019, கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் வெளியாக சிறிது காலம் ஆனாலும், ஊரடங்கால், இந்த போன் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. புதிய Motorola ரேஸரில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Samsung S20 series-ல் சாம்சங் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அவற்றில் Samsung Galaxy S20 Ultra மிக உயர்ந்த மாடலாகும். Galaxy S20 மற்றும் Galaxy S20+ ஆகிய இரண்டு சீரிஸ் ஊரடங்கிற்கு சற்று முன்பு விற்பனைக்கு கிடைத்தாலும், கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா விற்பனையைத் தொடங்கவில்லை.
எக்ஸினோஸ் 990 செயலி, பெரிய 6.9 அங்குல கியூஎச்டி + டிஸ்ப்ளே, 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்ட அல்ட்ரா சீரிஸில் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 சிறந்த மாடலாகும். இது 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது.
Realme-யின் Narzo series வெளியீடு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, ரியல்மி இந்தத் சீரிஸை வெளியிட முடியவில்லை. அது முடிந்தவுடன் இந்தியாவில் ரியல்மி Narzo 10 மற்றும் Narzo 10A வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.
நார்சோ 10, மீடியா டெக் ஹீலியோ ஜி 80-யிலும், நார்சோ 10 ஏ, ஹீலியோ ஜி 70 செயலியுடனும் அறிமுகப்படுத்தப்படும். இரண்டு போன்களும் 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியுடன் வரும்.
Vivo V19 முதலில் மார்ச் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட இருந்தது. பின்னர் ஏப்ரல் 3 வரை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் நிறுவனம் வெளியீட்டை காலவரையின்றி ஒத்திவைத்தது. விவோ வி 19 ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vivo இந்த போனை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விவோ வி 19 ஸ்னாப்டிராகன் 712 சிப்செட்டுடன் வருகிறது. முன்பக்கத்தில் இரட்டை கேமரா அமைப்புடன் ஹோல்-பஞ்ச் உள்ளது. போனின் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பு உள்ளது . ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட விவோவின் புதிய ஃபன்டூச் ஓஎஸ் 10-ல் வேலை செய்கிறது.
Xiaomi Mi 10 நீண்ட காலமாக காத்திருக்கிறது. ஷாவ்மி முன்னதாக இந்தியாவில் எம்ஐ 10-ஐ அறிமுகப்படுத்த மார்ச் 31 தேதியை நிர்ணயித்திருந்தது. ஆனால் ஊரடங்கு முதலில் ஏப்ரல் 14 வரை செயல்படுத்தப்பட்டது. இப்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த சீரிஸ் இன்னும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை. இருப்பினும், ஊரடங்கு முடிந்தவுடன் நிறுவனம் இந்த எம்ஐ 10 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Xiaomi Mi 10, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மற்றும் 8 ஜிபி ரேம் இருக்கக்கூடும். ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய அம்சம் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்பாகும்.
Huawei பி 40, பி 40 ப்ரோ மற்றும் பி 40 புரோ + ஆகியவற்றை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனங்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் விரும்புகிறது என்று தெரிகிறது. ஹவாய் ஏற்கனவே தனது இணையதளத்தில் Huawei P40 மற்றும் Huawei P40 Pro-வை பட்டியலிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களில் கிரின் 990 5 ஜி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட EMUI 10.1-ல் வேலை செய்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8 ஜிபி ரேம் உள்ளது. ஹவாய் பி 40 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. பி 40 ப்ரோ 256 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
ஹவாய் பி 40 டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, பி 40 ப்ரோ குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டுமே ஒரே 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டவை. இந்தியாவில் வெளியீட்டு தேதியை ஹவாய் இன்னும் தீர்மானிக்கவில்லை, ஆனால் இந்த சாதனங்கள் ஊரடங்கு முடிந்த பிறகு விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்