ஓப்போ ரெனோ 3 ப்ரோ இன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது, இது 44 மெகாபிக்சல் இரட்டை செல்பி கேமராவை இயக்கும் முதல் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. போனின் முன்பக்கத்தில் செல்பி கேமராக்களுக்கு இரண்டு கட்அவுட்களும், பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பும் இருப்பதை டீஸர்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஓப்போ ரெனோ 3 ப்ரோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் கூற்றுப்படி, புதிய போனை வெளியிடுவதற்காக புதுடில்லியில் ஒரு பத்திரிகை நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு மதியம் 12.30 மணிக்கு தொடங்கும், மேலும் Oppo அதன் யூடியூப் மற்றும் பிற சமூக சேனல்கள் வழியாக நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு லைவ் ஸ்ட்ரீம் இன்னும் நேரலையில் இல்லை, இந்த நகல் கிடைத்தவுடன் அதை புதுப்பிப்போம்.
இந்தியாவில் Oppo Reno 3 Pro-வின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் நிறுவனம் போனின் சீனாவின் விலைக்கு நிகரான விலையை நிர்ணயம் செய்யலாம். நினைவுகூர, ஓப்போ ரெனோ 3 ப்ரோ சீனாவில் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் டாப்-எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 4,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.45,000) ஆகும். இந்த போன் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக விற்பனைக்கு வர உள்ளது. ஓப்போ ரெனோ 3 ப்ரோ Aurora Blue, Midnight Black மற்றும் Sky White கலர் ஆப்ஷன்களில் இந்தியாவுக்கு வருவதை கிண்டல் செய்கிறது.
ஓப்போ பகிர்ந்த அதிகாரப்பூர்வ ரெண்டர்களின் படி, ரெனோ 3 ப்ரோ இரட்டை hole-punch செல்பி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குவாட் ரியர் கேமரா அமைப்பு, பின் பேனலின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சென்சார்கள் அனைத்தும் செங்குத்தாக சீரமைக்கப்படுகின்றன. இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தியா வேரியண்ட் 4 ஜி மட்டுமே இருக்கும். பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் ஷூட்டர் இருக்கும் என்றும் டீஸர்கள் வெளிப்படுத்துகின்றன. முன்புறத்தில், 44 மெகாபிக்சல் பிரதான செல்பி ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இருக்கும். ஓப்போ ரெனோ 3 ப்ரோ 'அல்ட்ரா நைட் செல்பி மோட்' வழங்க பட்டியலிடப்பட்டுள்ளது, இது ஒரு சிறந்த படத்தை உருவாக்க பல காட்சிகளை எடுக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்