ஜிஎஸ்டி வரிவிதிப்பால், இந்தியாவில் ஓப்போ ரெனோ 3 ப்ரோ, ரெனோ 2, ரெனோ 2 எஃப் மற்றும் ஓப்போ ஏ 9 2020 ஆகிய ஓப்போ போனன்களின் விலை உயர்ந்துள்ளது. ஷாவ்மி ஏற்கனவே தனது எம்ஐ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
Oppo Reno 3 Pro-வின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.29,990-க்கு கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது ரூ.31,990-யாக உயர்ந்துள்ளது. இதேபோல், Oppo Reno 2-வின் விலை ரூ.36,990-யில் இருந்து ரூ.38,990-யாக உயர்ந்துள்ளது. Oppo Reno 2Z விலை ரூ.25,990-யில் இருந்து ரூ.27,490-யாக உயர்வு. மேலும், Oppo Reno 2F விலை ரூ.21,990-யில் இருந்து ரூ.23,490-யாக உயர்ந்துள்ளது.
Oppo-வின் மிகவும் மலிவவான போன்களின் விலையும் உயர்ந்துள்ளது. Oppo A1k ரூ.7,490-யில் இருந்து, ரூ7,590-யாக உயர்வு. ஓப்போ ஏ 5 எஸ்-ன் 2 ஜிபி ரேம் வேரியண்டின் விலையும் ரூ.8,490-யில் ரூ.8,990-யாகவும், அதன் 3 ஜிபி மாடலின் விலை ரூ.8,990-யில் இருந்து ரூ.9,990-யாக அதிகரிப்பு. Oppo A5s--ன் 4 ஜிபி ரேம் மாடலும் ரூ.10,990-யில் இருந்து ரூ.11,990-யாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் Oppo A5 2020-யின் 3 ஜிபி ரேம் வேரியண்டின் விலையும் ரூ.11,490-யில் இருந்து ரூ.12,490-யாக அதிகரித்துள்ளது. அதன் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.12,990-யில் இருந்து ரூ.13,990-யாக உயர்வு. ஏ 5 2020-யின் டாப்-எண்ட் 6 ஜிபி ரேம் ஆப்ஷனும் ரூ.14,990-யில் இருந்து ரூ.1,000 அதிகரித்து ரூ.15,990-யாக உள்ளது.
Oppo A31 (2020) விலை ரூ.11,490-யில் இருந்து திருத்தப்பட்ட விலையில் ரூ.12,490-யாக உள்ளஹ்து. Oppo K1 விலையும் ரூ.14,990-யில் இருந்து ரூ.15,990-யாக உயர்ந்துள்ளது. மேலும், ஓப்போ ஏ 9 2020-யின் 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.14,990-யில் இருந்து ரூ.15,990-யாக உயர்வு. அதன் 8 ஜிபி ரேம் மாடலின் விலையும் ரூ.18,490-யில் இருந்து ரூ.17,490-யாக அதிகரித்துள்ளது. Oppo F15 விலையும் ரூ.19,990-யில் இருந்து ரூ. 21,990-யாக உயர்வு.
ஸ்மார்ட்போன் மாடல் | பழைய விலை (ரூ.) | புதிய விலை (ரூ.) |
---|---|---|
Oppo Reno 3 | 29,990 | 31,990 |
Oppo Reno 2 | 36,990 | 38,990 |
Oppo Reno 2Z | 25,990 | 27,490 |
Oppo Reno 2F | 21,990 | 23,490 |
Oppo F15 8GB | 19,990 | 21,990 |
Oppo A9 2020 4GB | 14,990 | 15,990 |
Oppo A9 2020 8GB | 17,490 | 18,490 |
Oppo A5 2020 3GB | 11,490 | 12,490 |
Oppo A5 2020 4GB | 12,990 | 13,990 |
Oppo A5 2020 6GB | 14,990 | 15,990 |
Oppo K1 | 14,990 | 15,990 |
Oppo A31 4GB | 11,490 | 12,490 |
Oppo A5s 2GB | 8,490 | 8,990 |
Oppo A5s 3GB | 8,990 | 9,990 |
Oppo A5s 4GB | 10,990 | 11,990 |
Oppo A1k | 7,490 | 7,990 |
Mobile Phone Sales to Be Hit, Say Industry Experts, as GST Hike Makes Them More Costly
“ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை ஏற்று, ஏப்ரல் 1, 2020 முதல் அனைத்து தளங்களிலும் ஓப்போ விலையை திருத்தியுள்ளது. ஓப்போவின் திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தை, மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் முதலில் கண்டறிந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்