இந்தியாவில் இந்த போனின் சரியான விலை பற்றிய தகவல் இன்னும் கசியவில்லை!
இன்று மும்பையில் நடைபெறும் விழாவில் சுமார் 6.30 மணிக்கு ஓப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. பாப் ஆப் கேமரா மற்றும் 48 மெகா பிக்சல் சென்சாருடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. லோ லைட் புகைப்படங்களுக்காக சூப்பர் நைட் மோட் வசதியைக் கொண்டு வெளியாகும் இந்தத் தயாரிப்பு இந்தியாவில்தான் முதலில் அறிமுகமாகுகிறது.
ஓப்போ எஃப் 11 ப்ரோ எதிர்பார்கப்படுகின்ற விலை:
இந்தியாவில் தனது அறிமுக விலையை பற்றிய தகவல் எதையும் ஓப்போ வெளியிடாத நிலையில், எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜேட் தயாரிப்பாக ரூ.15,000 முதல் ரூ.30,000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. இந்த போனில் 48 மெகா பிக்சல் கேமரா சென்சார் இடம் பெற்றுள்ளதால் அதிகப்படியான விலைக்கே வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அரோரா க்ரீன் மற்றும் தண்டர் ப்ளாக் நிறங்களில் விற்பனைக்கு வரும்.
ஓப்போ எஃப் 11 ப்ரோ எதிர்பார்கப்படுகின்ற அமைப்புகள்:
இதுவரை ஓப்போ நிறுவனம் சார்பாக வெளியாகியுள்ள தகவல்படி, இந்தத் தயாரிப்பில் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளதாகவும் அவைகளில் 48 மெகா பிக்சல் சென்சாரும் 5 மெகா பிக்சல் சென்சாரும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் பாப்-அப் செல்ஃபி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதன் சென்சார்களை பற்றிய தகவல் இன்னும் அறியப்படவில்லை. 6.5 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு பைய் மற்றும் மீடியா டெக் ஹீலியோ P70 SoC போன்ற மென்பொருட்களுடன் வெளியாகும் என எதிர்பார்ப்பு
இதர அமைப்புகளாக பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை இந்த ஓப்போ எஃப் 11 ப்ரோ தயாரிப்பு கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 4,000mAh பவர் கொண்டிருக்கலாம் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்