போன்களைத் தவிர, அமேசான் விற்பனையின் போது, மொபைல் பாகங்கள் ரூ. 69-யில் இருந்து தொடங்குவதாக பட்டியலிடப்பட்டுள்ளன.
அமேசான் கிரேட் இந்தியன் ஜனவரி விற்பனை 2020 ஜனவரி 22-ஆம் தேதியுடன் முடிவடையும்
அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020 இன்று மதியம் 12 மணிக்கு, ப்ரைம் உறுப்பினர்களுக்காக தொடங்க உள்ளது. குடியரசு தினத்திற்கு சற்று முன்னதாக ஜனவரி 22 வரை இந்த விற்பனை நடைபெறும். மேலும், OnePlus 7T, Redmi Note 8 Pro, iPhone XR மற்றும் பல போன்கள் விலைக் குறைப்புகளுடன் பட்டியலிடப்படும். ப்ரைம் அல்லாத உறுப்பினர்களுக்கான விற்பனை 12 மணி நேரம் கழித்து அதாவது இன்று நள்ளிரவில் தொடங்கும். ஸ்மார்ட்போன்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடியும், மடிக்கணினிகள் மற்றும் கேமராக்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடியும் உள்ளன. அமேசான் விற்பனையின் போது, மடிக்கணினிகளில் ரூ. 35,000 தள்ளுபடி மற்றும் no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் பெரும்பாலான தயாரிப்புகளுக்கும் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன் பட்டியலிடப்படும். அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையைப் பொறுத்தவரை, ஈ-காமர்ஸ் நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து அதன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால்10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.
OnePlus 7T மற்றும் OnePlus 7T Pro தள்ளுபடி விலையில் பட்டியலிடப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. முந்தையவை, அமேசான் விற்பனையின் போது 34,999 ரூபாயும், Pro வேரியண்ட் ரூ. 51.999-க்கும் விற்பனைக்கு வரும். OnePlus 7T Pro-வின் விலையில், தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகை வழியாக கூடுதலாக 2,000 தள்ளுபடியும் அடங்கும். Redmi Note 8 Pro ரூ. 1,000 தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும், Vivo U20 (ரூ. 2,000 தள்ளுபடியுடன்) ரூ. 9,999 விலையைக் கொண்டிருக்கும். Oppo F11, அதன் அசல் விலையிலிருந்து, ரூ. 10,000 தள்ளுபடியை பெறும். இது விற்பனை காலத்தில் 13,990 ரூபாயாக விலையிடப்படும்.
அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020 iPhone XR, iPhone 11 Pro, Samsung Galaxy Note 10+ மற்றும் பல பிரீமியம் போன்களிலும் விலைக் குறைப்புகளைக் காணும். பட்ஜெட்டுக்கு ஏற்ற Samsung Galaxy M30s ரூ. 12,999-க்கு விற்பனை செய்யப்படும் மற்றும் Samsung Galaxy M30 ரூ. 8,999-யில் இருந்து விற்பனை தொடங்கும். Oppo Reno 2F மற்றும் Vivo S1 எக்ஸ்சேஞ்-ல் கூடுதலாக ரூ. 3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும். Oppo Reno 10x Zoom அனைத்து ப்ரீபெய்ட் ஆர்டர்களுக்கும் ரூ. 6,000 தள்ளுபடியுடன் கிடைக்கும். அமேசான் அதன் வரவிருக்கும் விற்பனையின் போது Nokia 4.2-வில் 'lowest price ever' என்று உறுதியளித்துள்ளது. விலைக் குறைப்புகளுடன் பட்டியலிடப்பட்ட பிற போன்களும் இதில் உள்ளன. மேலும் அனைத்து ஸ்மார்ட்போன் ஒப்பந்தங்களையும் நிறுவனத்தின் தளத்தில் காணலாம்.
போன்களைத் தவிர, அமேசான் விற்பனையின் போது, மொபைல் பாகங்கள் ரூ. 69-யில் இருந்து தொடங்குவதாக பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், chargers Bluetooth earphones, power banks, cases & covers மற்றும் screen protectors ஆகியவை அடங்கும். Mi Band 3 விலைக் குறைப்பையும் காணும், மேலும் HP 14 Core i3 Windows 10 லேப்டாப்பும் விலைக் குறைப்பைக் காணும். boat Airdropes, Canon EOS 1500D DSLR, JBL Flip 3 bluetooth speaker, Samsung Galaxy Tab A மற்றும் பலவற்றில் விலைக் குறைப்புகளும் வழங்கப்படும். மடிக்கணினிகளில் ரூ. 35,000 தள்ளுபடி வரை எதிர்பார்க்கப்படுகிறது, மற்றும் கேமராக்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 தள்ளுபடியைக் காணும். ஹெட்ஃபோன்கள் குறைந்த விலையில் ரூ. 299-யில் இருந்து தொடங்குவதாக பட்டியலிடப்படுள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2020-ன் போது அனைத்து மின்னணு ஒப்பந்தங்களையும் காண, அமேசானின் பிரத்யேக பக்கத்திற்குச் (dedicated page) செல்லவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama