இந்தியாவில் ஓப்போ F11 மற்றும் ஓப்போ F11 ப்ரோ விலைகள் ரூ. 2,000 குறைந்துள்ளது. ஓப்போ ஏ1 கே மற்றும் ஓப்போ F11 ஸ்மார்ட்போன்களின் விலையில் சமீபத்திய திருத்தத்தைத் தொடர்ந்து தற்போது விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஓப்போ F11 மற்றும் F11 ப்ரோ விலைகள் இப்போது, இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற மூன்றாம் தரப்பு இணைய வர்த்தக விற்பனையாளர்கள் தங்கள் தளங்களில் விலைகளை இன்னும் சரிசெய்யவில்லை. புதிய விலைகள் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் கிடைக்கின்றன. ஓப்போ F11 மற்றும் ஓப்போ F11 ப்ரோ, இரண்டும் போன்களும் மார்ச் மாதத்தில் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கின. இதன் விலை ரூ.19.990.
இந்தியாவில் ஓப்போ F11 விலை:
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகையின் ஓப்போ F11 விலை ரூ. 16,990 என்று அதிகாரப்பூர்வ ஓப்போ இந்தியா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போநின் முந்தைய விலை ரூ. 17.990. கடந்த வாரம்தான் ஓப்போ F11, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ. 16,990 இருந்து ரூ. 14,990-யாக குறைக்கப்பட்டது. ஒப்போ F11 இன் 4 ஜிபி ரேம் மாடலுக்கு புதிய விலையில் திருத்தம் எதுவும் இல்லை.
இந்தியாவில் ஓப்போ F11 ப்ரோவின் விலை:
ஓப்போ F11 உடன், ஓப்போ F11 ப்ரோ விலை அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள பட்டியலின்படி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வசதி வகையின் விலை ரூ. 21,990 இருந்து ரூ. 19,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில், புதிய விலைகளை இன்னும் பட்டியலிடவில்லை. இருப்பினும், மும்பையைச் சேர்ந்த நம்பகமான சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இன்று முதல், ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் சமீபத்திய விலைகள் நடைமுறைக்கு வருவதாக தெரிகிறது.
ஓப்போ F11மற்றும் F11 ப்ரோ இரண்டும், இந்தியாவில் 48 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமராவாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஓப்போ F11 ப்ரோ பாப்-அப் செல்ஃபி கேமரா வசதியுடன் வருகிறது. அதே நேரத்தில், ஓப்போ F11 டிஸ்ப்ளே பேனலின் மேல் செல்ஃபி கேமராவை சேர்க்க வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டுள்ளது.
ஓப்போ எஃப் 11 விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்:
இரட்டை சிம் கொண்ட ஓப்போ F11, Android 9 Pie கலர் OS 6 உடன் இயங்குகிறது மற்றும் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்ப்ளே 19.5: 9 விகிதத்தைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் MediaTek Helio P70 SoC ஆல் இயக்கப்படுகிறது. 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என்று விருப்பத்திற்கேற்ப உள் சேமிப்பு ஆப்ஷன்கள் உள்ளன.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ஓப்போ F11, இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், எஃப் / 1.79 லென்ஸும், 5 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், எஃப் / 2.4 லென்ஸும் அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் சென்சாருடன் முன்பக்கத்தில் எஃப் / 2.0 லென்ஸைக் கொண்டுள்ளது.
ஓப்போ F11 இன் இணைப்பில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS மற்றும் Micro-USB port ஆகியவை அடங்கும். இது தவிர, ஸ்மார்ட்போனில் 4,020 mAh பேட்டரி, VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
ஓப்போ எஃப் 11 ப்ரோவின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்:
ஓப்போ F11-ஐப் போலவே, டூயல் சிம் ஓப்போ F11 ப்ரோ Android 9 Pie கலர் OS 6 உடன் இயங்குகிறது. மேலும், 19.5:9 விகிதத்துடன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio P70 SoC -யால் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஓப்போ F11 ப்ரோவின் கேமராவைப் பொறுத்தவரை, ஓப்போ F11-க்கு இணையாக இருக்கிறது. இருப்பினும், வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளேவுக்கு பதிலாக பாப்-அப் செல்ஃபி கேமரா வசதியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4,000 mAh பேட்டரியை VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 ஐ ஆதரிப்பதோடு, பின்புறத்தில் கைரேகை சென்சாரும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்