ஒன்பிளஸ் 8 ப்ரோ இன்று இந்தியாவில் விற்பனையில் கிடைக்கிறது, இன்று பிற்பகல் 12 மணி முதல் விற்பனை தொடங்குகிறது. அறிமுகமாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை அமேசான் மற்றும் ஒன்பிளஸ்.இன் மூலம் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் தாமதமாக இருந்தாலும் மே.29 அன்று விற்பனைக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏப்ரல் மாதத்தில் ஒன்பிளஸ் 8 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், ஒன்பிளஸ் 8 ப்ரோ இதுவரை நாட்டில் விற்பனையில் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், ஒன்பிளஸ் 8 கடந்த காலத்தில் இரண்டு முறை விற்பனைக்கு வந்தது.
இந்தியாவில் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலையானது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.54,999 ஆகும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.59,999 ஆகும். இந்த மொபைல் பனிப்பாறை பச்சை, ஓனிக்ஸ் பிளாக் மற்றும் அல்ட்ராமரைன் ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது.
ஒன்பிளஸ் 8 ப்ரோவில் விற்பனை சலுகையாக எஸ்பிஐ கார்டுகள் மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. அத்துடன் ஜியோவில் ரூ.6,000 வரையிலான பலன்களும் கிடைக்கிறது. மேலும், விலை இல்லாத EMI விருப்பங்களுடன் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ இன்று மதியம் 12 மணிக்கு ஐ.எஸ்.டி., அமேசான்.இன் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும். இந்த நேரத்தில், சரியான ஆஃப்லைன் ஸ்டோர் கிடைக்கும் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
டூயல் சிம் (நானோ) ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆண்டிராய்டு 10 ஆக்ஸிஜன் ஓஎஸ் உடன் இயக்குகிறது மற்றும் 6.78 இன்ச் கியூஎச்டி + (1440x3168 பிக்சல்கள்) அமோலேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoCல் இயக்கப்படுகிறது, இதனுடன் 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் உள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, 48 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 689 சென்சார், டெலிஃபோட்டோ லென்ஸுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், வைட் ஆங்கிள் லென்ஸுடன் 48 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதந மொபைலின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பி கேமரா சென்சார் உள்ளது.
சேமிப்பிடத்தைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 8 ப்ரோ 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 சேமிப்பக பதிப்புகளைக் கொண்டுள்ளது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த மொபைலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் உள்ளது.
Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்