ஒன்பிளஸ் 8 இந்தியாவில் அமேசான்.இன் நிறுவனத்திலிருந்து மட்டுமே கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 8-ன் விலை ரூ.41,999 ஆகும்.
OnePlus 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு போன்களின் விலையை சீன நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகியவை மே 29-ஆம் தேதி விற்பனைக்கு வரும்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட OnePlus 8-ன் விலை ரூ.41,999 ஆகும். இந்த போன் இந்தியாவில் அமேசான்.இன் நிறுவனத்திலிருந்து மட்டுமே கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.44,999 ஆகும். 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 8-ன் விலை ரூ.49,999 ஆகும். கடைசி இரண்டு வகைகள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கும்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட OnePlus 8 Proவின் விலை ரூ.54,999 ஆகும். 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.59,999 ஆகும். இந்த இரண்டு போன்களையும் அமேசான்.இன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இருந்து வாங்கலாம்.
இந்த போனில் இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். ஒன்பிளஸ் 8 ப்ரோ 6.78 இன்ச் கியூஎச்.டி + ஃப்ளூயிட் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120Hz-ன் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 689 சென்சார் உள்ளது. முதன்மை கேமராவில் ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் பட உறுதிப்படுத்தல் உள்ளது. 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 48 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கலர் ஃபில்டர் வருகிறது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் உள்ளன. போனின் உள்ளே 4,510 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது. ஒன்பிளஸ் 8 ப்ரோவின் எடை 199 கிராம் ஆகும்.
இந்த போநும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். ஒன்பிளஸ் 8-ல் 6.55 அங்குல FHD + Fluid AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
ஒன்பிளஸ் 8 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் உள்ளது. 2 மெகாபிக்சல் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் உள்ளன. போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. ஒன்பிளஸ் 8 எடை 180 கிராம் ஆகும்.
| ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல் | இந்திய விலை |
|---|---|
| OnePlus 8 (6GB + 128GB) | ரூ. 41,999 |
| OnePlus 8 (8GB + 128GB) | ரூ. 44,999 |
| OnePlus 8 (12GB + 256GB) | ரூ. 49,999 |
| OnePlus 8 Pro (8GB + 128GB) | ரூ. 54,999 |
| OnePlus 8 Pro (12GB + 256GB) | ரூ. 59,999 |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts