இந்தியாவில் OnePlus 7T பயனர்கள் இப்போது புதிய OxygenOS அப்டேட்டைப் பெறுகின்றனர். இது ஜனவரி பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஜியோ சந்தாதாரர்களுக்கான வைஃபை அழைப்பு ஆதரவைக் கொண்டுவருகிறது. இந்தியாவில் உள்ள ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்களுக்கு VoWiFi கிடைக்கிறது. மேலும், OnePlus 7T-யில் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கான ஆதரவு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இந்த அப்டேடில், மேம்பட்ட கணினி நிலைத்தன்மை மற்றும் பொதுவான பிழை திருத்தங்களும் அடங்கும். இந்தியன் OnePlus 7T பயனர்கள் OxygenOS 10.3.1 அப்டேட்டைப் பெறுகின்றனர். அதே நேரத்தில் உலகளாவிய பயனர்கள் OxygenOS 10.0.8 அப்டேட்டைப் பெறுகின்றனர்.
நிறுவனம் தனது மன்றங்களில் (forums) அப்டேட் வெளியீட்டு அறிவிப்பை வெளியிட்டது, மேலும் சமீபத்திய OnePlus 7T புதுப்பிப்பு ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது என்று கூறுகிறது. இந்தியன் OnePlus 7T பயனர்களுக்கான OxygenOS 10.3.1 அப்டேட் அதிகரிக்கும் வகையில் வெளிவருகிறது. இந்த அப்டேட் ஒரு சிறிய சதவீத பயனர்களை எட்டும், மேலும் முக்கியமான பிழைகள் எதுவும் காணப்படாத நிலையில் சில நாட்களில் ஒரு பரந்த வெளியீடு தொடங்கும். இந்த அப்டேட் over-the-air-ல் வெளிவருகிறது, மேலும் பயனர்கள் தங்கள் போனில் அப்டேட் கிடைத்ததும் தானாகவே அறிவிப்பைப் பெறுவார்கள். பயனர்கள், Settings-ல் இந்த அப்டேட்டை மேனுவலாகவும் சரிபார்க்கலாம். வலுவான Wi-Fi இணைப்பு வழியாகவும், போன் சார்ஜில் இருக்கும் போதும் இந்த அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
சேஞ்ச்லாக்கிற்கு வருகையில், OnePlus 7T OxygenOS 10.3.1 அப்டேட், ரேம் நிர்வாகத்தை மேம்படுத்துகிறது, சில செயலிகளுடன் வெற்று திரை சிக்கல்களை மேம்படுத்துகிறது, கணினி நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் பொதுவான பிழைகளை சரிசெய்கிறது. privacy alerts-க்கான நினைவூட்டல்களை ஆதரிக்கும் திறனையும் இது சேர்க்கிறது, பாதுகாப்பு பேட்சை ஜனவரி 2020-க்கு புதுப்பிக்கிறது, மேலும் ஜியோ சந்தாதாரர்களுக்கான வைஃபை அழைப்பிற்கான ஆதரவையும் தருகிறது. ஜியோ கடந்த மாதத்தில் தான் வைஃபை அழைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது, மேலும் இது பயனர்களுக்கு வைஃபை நெட்வொர்க்கில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது.
இது தவிர, இந்திய பயனர்களுக்கான அப்டேட், குறிப்புகள் மற்றும் தொடர்புகளுடன் ஆதரிக்கப்பட்ட ஒத்திசைவையும் தருகிறது. Work-Life Balance mode-ல் பல மாற்றங்கள் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்